பாலை மணலில் ஓடும் மான் கானல் நீரை, நீரென எண்ணி ஓடுவதைப் போல, மாந்தர்கள் பூவுலக வாழ்க்கையை நிஜம் என்று நம்பி மகிழ்ச்சியில் மூழ்குகிறார்கள். ஆனால் புலன்களை வென்று மனதை மேல் நிலைக்கு கொண்டு சென்றவர்கள் இந்த இந்தப் பூவுலக வாழ்க்கையில் மயங்குவதில்லை. அவர்கள் மெய்ப் பொருளை மட்டுமே நம்புவார்கள். கானல் நீரை நிஜம் என்று நம்பும் மான் ஓடிக் கொண்டே தான் இருக்கும் கானல் நீரும் தள்ளி தள்ளி போய்க் கொண்டே இருக்கும். முடிவில் நீர் கிடைக்காத மான் களைத்து விழும்.
மனித வாழ்க்கையும் கானல் நீரை நம்பி ஓடும் மான் போல ஆகிவிடுகிறது, மெய் பொருள் என்ன என்று அறியாமலே அவர்கள் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது . இந்தக் கருத்தினை மிக எளிய வார்த்தைகளில் அருமையாக எடுத்துக் காட்டுகிறார் பாம்பாட்டிச் சித்தர்.
இதோ அவர் பாடல்..
"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!"
Post a Comment



14 comments:
தோழி
ஒன்று கேட்டால் தவறாக எண்ணக்கூடாது.
இந்த சித்தர் பாடல்களை தாங்கள் முழு மனதாக ஏற்று வெளியிடுகிறீர்களா ?
@Bullet மணி
சித்தர்கள், சித்தர்கள் வாக்கில் உள்ள எனது நம்பிக்கையே இவற்றை பதிவாக இடவும், அவை பற்றிய தேடலுக்கும் வழிசெய்தது... மிக்க நன்றி...
ஏன் கேட்கிறேன் என்றால் நம் மனம் இந்த சித்தர் பாடல்களை ஏற்றாலும் இந்த உடலும், சமூக அமைப்பும் அதற்கு ஏற்றார் போல் நம்மில் பலர் வாழ்வதில் பெரிய தடைகற்களாக இருக்கிறது
நன்றி தோழி
//இந்த உடலும், சமூக அமைப்பும் அதற்கு ஏற்றார் போல் நம்மில் பலர் வாழ்வதில் பெரிய தடைகற்களாக இருக்கிறது//
இந்த உடலும், சமூக அமைப்பு என்பதும் நாம்தான் நண்பரே..
எதிலும் அளவு, முறை பின்பற்றினால் சித்தர்கள் சொன்னது நிறைவேறும்.
உடலைவிட நாம் சரிசெய்ய வேண்டியது மனதையே..
சித்தர்கள் //வீணாய் வீம்பு பேசிடார்// வீணாய் வம்பு என்பது நமது மனதின் செயல்தானே..
வாழ்த்துகள் புல்லட்மணி..
உண்மை.. உண்மை.. உன்மையான கருத்துக்கு ஜே....
எல்லாம் சரி.. சித்தர் அவருக்கு சரிங்கறத சொல்றார்.. ஆனா தற்போதைய உலக வாழ்க்கை முறைக்கு இதெல்லாம் ஒத்து வருமா? அடுத்த நொடியே மாயை தானே? கானல்தானே? ஆகவே எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? அவர் எதுவும் செய்யாமல் இருக்க சொல்லவில்லை, கெட்டது செய்யாதே என்றுதான் சொல்கிறார் என்று சொல்கிறீர்களா? அப்படியென்றால் எது கெட்டது? புலிக்கு மான் நல்லது அது இயற்கை... ஒவ்வொன்றுக்கும் இது போல சுழற்சி இருக்கிறது.. அப்ப இந்த பாட்டுக்கு அர்த்தம்? அதுவும் இருக்கிறது... ஆனா யார் சொல்லுவா?
உலகம் என்பது ஐம்புல விஷயங்களிள் உருவமே. வேறல்ல. அந்த ஐந்து விஷயங்களும் ஐந்து இந்திரியங்களுக்கு (மெய், வாய், கண், மூக்கு, செவி) விஷயமாகும். இப்படிப்பட்ட உலகத்தை ஒரே மனம் ஐந்து இந்திரியங்களின் வழியாய் அறிவதால் மனத்தைத் தவிர வேறாக உலகம் என்று ஒன்றுமில்லையே”.
நம் கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்று கூறப்படுகிற தல்லவா? ஆம்; தீர விசாரிப்போம்.
உலகம் இருப்பதாக உணரும் புலனறிவு மனத்தால் போஷிக்கப்படுகின்றதன்றோ? மனம் கிரகிக்காவிடில் கண் விழித்திருந்தும் பார்க்காது; காது கேட்காது; மெய் உணராது; மூக்கு நுகராது; நாக்கு சுவை காணாது; ஏதேனும் ஓர் சிந்தனையில் ஊன்றியிருக்கும் போது நம்மில் பலருக்குக் கண்ணுக்கெதிரே நடப்பவை தெரியாது போவதில்லையா? பிறர் பேசும் கேட்கப் படாமற் போவதில்லையா? மனம் அப்பொழுது அந்தப் பொறிகளின் வழியே இயங்காததே இதன் காரணம். இது பலர்க்கும் அனுபவம். ஆகவே மனத்தால் புலனறிவு உண்டாகின்றது. மனம் வேலை செய்யாத போது புலனறிவும், அதன் வடிவான உலக அனுபவமும் இல்லாததாகிறது. மனமற்ற நித்திரையில் உலகம் தோன்றுவதில்லை. மனம் தொழில் புரியும் கனவிலும், விழிப்பிலும் (நனவிலும்) உலகம் தோன்றுகிறது. ஆதலின் மனத்தையன்றி உலகம் உண்டோ? “இல்லை” என்கிறார் ஸ்ரீ பகவான்.
“சத்தியம் எது என்று நிரூபிக்க லக்ஷணம் யாது? எது சாச்வதமாய் (நிலையாய்) ஸ்வதஸ்ஸித்தமாய் (தானாகவே இருப்பதாய்) சுயம் பிரகாசமாய் (எதனாலுமின்றித் தானே விளங்குவதாய்) நிர்விகாரமாய் (மாறாததாய்) இருக்கிறதோ அதுவே சத்தியம். உலகம் ஸ்வதஸ் ஸித்தமானதா? மனதையன்றி உலகமுண்டா . . . . . ? இல்லையே! தர்க்கச் சாஸ்திரத்திற்குச் சம்மதமான முறையிலேயே நீ ஏன் உலகின் சத்தியத்தை நிர்மாணிக்கக் கூடும். “நான் இருக்கிறேன்” என்று உலகம் சொல்லுமா? முடியாது. ஆனால் “நான் இருக்கிறேன்” என்று நீ உன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் உன் இருப்பு வெறும் ஜட இருப்பல்ல. அது அறிவோடு கூடியது. உண்மையில் இந்த இருப்பும், அறிவும் ஒன்றே. (இருப்பு=ஸத்து, அறிவு=சித்து) ஒன்றை விட்டு ஒன்று இருப்பதில்லை. உலகம் தன் இருப்பை அறிவதுமில்லை. அதாவது உலகம் ஸ்வதஸ்ஸித்தமோ சுயம் பிரகாசமோ அல்ல. அப்படிப்பட்ட உலகம் மெய்யென்று எப்படிக் கூறுவாய்? மேலும் இவ்வுலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறதே! இடையறா மாறுதலே அதன் லக்ஷணம். ஆதலால் மற்றொன்றைச் சார்ந்ததாய், தன் உணர்வற்றதாய், நிலையற்றதாய், எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் உலகம் சத்தியமல்ல. நீ சத்தியம் ஒன்றையே தேடுபவனாயிருந்தால் உலகம் உண்மையற்றது என்று அங்கீகரிப்பதைத் தவிர உனக்கு வேறு வகையில்லை என்றருள்கிறார் ஸ்ரீ பகவான். நாய் உண்மை என்று எண்ணும் வரை கல்லைக் காண முடியாது. கல்லைக் கல்லாகத் தெரிந்து கொள்ளாதபோது கற்பித நாய் உண்மையாகவே தோன்றும். உலகமும் இவ்வாறே.
எனவே உலகம் உண்மையற்ற தென்பதை உணர்ந்தாலன்றி அது ஆன்மாவை மறைக்கும். அதன் உண்மையற்ற தன்மையை நாம் ஏன் நினைப்பதே இல்லை? காரணம், மனமே உலகைத் தோற்றுவிப்பது. தான்படைத்த உலகைத் தானே பொய்யென்று அது எப்படி ஒத்துக்கொள்ளும்! கனவிற் காணும் உலகைப் போன்று நனவும் தன் திருஷ்டி தோஷமே என்றுணர வேண்டும். அதற்கு விவகரிக்கும் மனம் ஓய்ந்து துயில், கனவு, நனவு ஆகிய மூன்றவஸ்தைகளையும் பரிசோதித்து தன் உண்மையை அறிய வேண்டும்.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே
நல்ல பதிவு. நன்றி.
@vikram
மிக்க நன்றி...
@rajsteadfast
மிக்க நன்றி...
Piappaiyum,Irappaiyum aazhndhu sindhithu paarungal...Manidha vaazhkai oru Maayai than..
Meipporul nilaiyil nindru sindhithaal, Manidha Vaazhkai oru Maayai than..
Thoongum podhu kanavu eppadi unmai polavae thondrukiratho, adhae pola andraada vaazhvil moozhgi irukkum podhu Vaazhkai Nijam pola thondrigiradhu..
Aanaal idhai patri ellaam migavum pesa/sindhikka koodaadhu...! Appuram romba discourage aagi veettukulla paduthukka vendiyadhu than...Maranam orunaal varathaan pogiradhu...Veru Vazhi? Poithaan aaganum...!
எனக்கு பிடித்த இவரின் ஒரு பாடல்...
நாடு நகர வீடு மாடு நற்பொருள் எல்லாம் நடுவண் வரும்போது நாடி வரும்மோ
கூடுபோனபின் அவற்றால் கொள் பயன் என்னோ
யானை சேனை தேர் பரி யாவும யமன வரும்போது துனையமோ . முக்கனியும் சர்க்கரையும் முதிர்சுவை பண்டகளும் , முந்தயுண்டமையாய் , மிக்க உயிர் போன பின்பு மண் என்னை விழுங்க மெய்யாய் கண்டோமென்று ஆடு பாம்பே!
Post a Comment