அகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத முறை...

Author: தோழி / Labels: , ,
தனது குருநாதர் மூலிகை ஒன்றின் மூலம் இரும்பைத் தங்கமாக்கிக் காட்டியதாக அகத்தியர் சொல்கிறார்.

"விந்தையான குருத்தங்கம்
விளம்பும் சொல்லை குருநாதன்
செத்தை பெருக்கித் தானெடுத்து
தென்னை மரத்தின் கீழாக
சத்தையுடைய மூலிதனை
சதிராய்ப் பிடுங்கி இரும்பிலிட்டு
மேத்தையாகச் சில்லிட்டு
மூடிப் புடமும் போட்டாரே"


"போட்ட புடத்தைச் சாணானும்
புகழாய்த் தென்னைமரச் சோலை
தொட்டமுடனே பாத்திருந்த
நொண்டிச் சாணான் கண்டறிந்தான்
வாட்டமுள்ள பொன் அதுவை
வாசாய்க் கண்டான் சோலைமகன்
தாட்டிகமாய் தானும் வந்து
சதுராய் எண்ணம் கொண்டானே"


"கொண்டான் கையில் ஆயுதத்தை
கூறாம் கத்தி தனை எடுத்து
கண்டாற் போல தழைஒடித்து
கருவாய்க் கத்தி மேல்பூச
அண்டாதங்கம் என்ன சொல்வேன்
அப்பா சாணன் வாதமப்பா
கொண்டா மணியாம் தங்கமப்பா
கேவன தங்கம் இதுவாமே"


- அகத்தியர் பாடல் -

குருநாதர் தனக்கு செய்து காட்டிய இரும்பை தங்கமாக்கும் முறையை விளக்கும் அகத்தியர் இறுதியில், குருநாதர் இரும்பைத் தங்கமாக மாற்றிக் காட்டியபோது அருகில் இருந்த தென்னஞ் சோலையில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாணான் என்பவன், அந்த மூலிகையை எடுத்து அரைத்து சாறை தன்னிடமிருந்த கத்தியில் பூச கத்தியானது தங்கமாய் மாறியதாம். அதனால் இந்த இரசவாத முறைக்கு "சாணான் வாதம்" என்று பெயர் வந்தது என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

அண்ணாமலையான் said...

புத்தகத்திலிருந்து ப்ளாக்கிற்கு... ரைட்டு

தோழி said...

@அண்ணாமலையான்

ரைட்டு.. அகத்தியர் எழுதிய நூலின் பாடல்கள் தான்.. விளக்கம் மட்டுமே என்னுடையது... நன்றி.

அண்ணாமலை..!! said...

அகத்தியரை எந்தப் புத்தகத்தில் சென்று நாம் படிக்கப் போகிறோம் நண்பரே.!
இப்படித் தோழி போல் யாராவது எழுதி அதைப்
படித்தால் தான் உண்டு.! நன்றி.!

தோழி said...

@அண்ணாமலை..!!

மிக்க நன்றி தோழா...

அண்ணாமலையான் said...

அண்ணாமலை..!! said...

அகத்தியரை எந்தப் புத்தகத்தில் சென்று நாம் படிக்கப் போகிறோம் நண்பரே.!
இப்படித் தோழி போல் யாராவது எழுதி அதைப்
படித்தால் தான் உண்டு.! நன்றி.!"
ஆஹா அருமை அட்டகாசம்... தோழா.. என் கண்ணை திறந்து விட்டீர்கள்... என்றுதான் கூற வேண்டும்... மிக்க நன்றி.... நன்றி...

Mani said...

Super

kamalakannan Ondiveearn said...

nantri

vaithi lingam said...

வாசியோகம்

சித்தர்களின் யோகக்கலை பயிற்சி

சித்தர்களிடம் பேச , எழுத , உங்கள் சந்தேகங்களை தீர்க்க

முடிவான முடிவு முடிவு , இதற்குமேல் ஒன்றுமே இல்லை

முக்கால கர்ம வினை நீங்கி , மீண்டும் பிறவாநிலை அடைய
நம் சந்ததிகளுக்கு வாழ்வின் வழிகாட்ட , சித்தர்களை நாடுங்கள்

சித்தர் போக்கே சிவன் போக்கு

ஓம் சிவம் சித்தம் சிவம்
தொடர்புக்கு : சி . வைத்திலிங்கம் , 97914 68867

vaithi lingam said...

வாசியோகம்

சித்தர்களின் யோகக்கலை பயிற்சி

சித்தர்களிடம் பேச , எழுத , உங்கள் சந்தேகங்களை தீர்க்க

முடிவான முடிவு முடிவு , இதற்குமேல் ஒன்றுமே இல்லை

முக்கால கர்ம வினை நீங்கி , மீண்டும் பிறவாநிலை அடைய
நம் சந்ததிகளுக்கு வாழ்வின் வழிகாட்ட , சித்தர்களை நாடுங்கள்

சித்தர் போக்கே சிவன் போக்கு

ஓம் சிவம் சித்தம் சிவம்
தொடர்புக்கு : சி . வைத்திலிங்கம் , 97914 68867

Post a Comment