அகத் தூய்மை...

Author: தோழி / Labels: ,

நம்முடைய பாவ மூட்டைகளைக் கரைக்க புனித தீர்த்தங்களில் நீராடி வருவோம, புண்ணிய ஷேத்திரங்கள் சென்று தரிசனம் பண்ணுவோம்.

பாகற்காயை எந்த நதியில் கழுவி எடுத்தாலும், அதன் சுவை மாறது, என்பது போலவே நம்முடைய இயல்பும் அப்படித்தான். நம் உள்ளம் தூய்மை அடையாமல் எங்கு சென்று எது செய்தாலும் பலன் தரப் போவதில்லை.

உள்ளம் மாசற்றதாயின் இறைவன் அங்கே விரும்பி வந்து வீற்றிருப்பான்.

சித்தர்கள் சொல்லுவதும் உளத்தூய்மையையே,

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு".


என்று வள்ளுவர் உரைத்ததும்...

"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டா"


என்று அகத்தியர் உரைத்ததும்...

"சித்தத் தலம் போல தெய்வம் இருக்கின்ற
சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
சுத்தத் தலங்களுண்டோ?"


என்று குதம்பைச் சித்தர் உரைத்ததும் அகத் தூய்மையைத்தானே..?

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

14 comments:

spiritual ocean said...

தங்களது ஆன்மீக முயற்சி மென்மேலும் பரவ வாழ்த்துக்கள்.இப்படிக்குwww.aanmigakkadal.blogspot.com

தோழி said...

மிக்க நன்றி...

D.R.Ashok said...

உண்மைதாங்க..... :)

தோழி said...

மிக்க நன்றி...

rajsteadfast said...

நல்ல தகவல். சாது அப்பாதுரை அவர்களைப் பற்றி எழுத வேண்டுகிறேன். அவரைப் பற்றிய புத்தகங்கள் இருப்பின், பெயர்களை தெரியப்படுத்தவும்.

நன்றி

தோழி said...

முயல்கிறேன்... மிக்க நன்றி...

உருத்திரா said...

வெள்ளை நிற மல்லிகையோ?, வேறெந்த மாமலரோ?.
வள்ளல் அடியினருக்கு வாய்த்தமலரெதுவோ?,
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல,
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
------சுவாமி விபுலானந்த அடிகள்----------- ,

தோழி said...

@உருத்திரா

மிக்க நன்றி...

கவிநயா said...

சின்ன வயதில் நிறைய தெரிந்து வைத்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.

MURUGU said...

அகத்தூய்மையே அழகிய வாழ்வுக்கு வழி என்பதை அருமையாய் சொல்லிவிட்டீர்கள்.

Pudhiyavan said...

புதியவன்,

இந்த தளத்திற்கு நான் சீடனாகிவிட்டேன்.

All the best for your successful this presentation.

Pudhiyavan said...

புதியவன்.


இந்த தளத்திற்கு நான் சீடனாகிவிட்டேன்.
தொடர்ந்து எழுத. all the best for your successful task.

SENTHIL said...

very good explanation..........

Inquiring Mind said...

பெரும்பாலும், குதர்க்கவாதிகளும், நாத்திக வாதிகளும், பாரம்பரியத்தை தகர்க்க சொல்லும் வாதம் இது..

மனிதன் தான் இருக்கும் சூழ்நிலையால் பாதிக்கப்படுகிறான் என்பது எல்லாருக்கும் தெரிந்தது.. சூழ்நிலை என்பது, சுற்றம், இயற்கை அம்சம், நிலத்தின் தன்மை, தண்ணீரின் குணம், என பல வகைப்படும்..

அந்த காலத்தில் ஒரே இடத்தில் நிலைத்து வாழும் குடியான வாக்கை முறையே பெரும்பாலான மக்கள் வாழ்ந்தனர்.. ஆகையால், அந்த நிலத்தில் இயற்கையாக ஒரு சில தாதுக்கள், பற்றாக்குறாய் இருக்கும்.. அதை நிவர்த்தி செய்யவே, இது போல புனித யாத்திரை செய்து வந்தனர்.. வருடம் ஒரு முறை இப்படி ஊரை விட்டு கோயிலுக்கு சென்று வரும்பொழுது, அந்தந்த பகுதியின் நிலப்பரப்பு, தாதுக்கள், நம் உடம்பில் சேகரிக்கப்படுகின்றன..

நம் பாரத பண்பாட்டில் புனித ஸ்தலங்கள் அனைத்தும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நோய்களை தீர்க்கும் என்பதன் பின்னனி இதுதான்.. நம் முன்னோர்கள் அப்படிப்பட்ட இடத்தையே தேர்ந்தெடுத்து புனித ஸ்தலமாக சொல்லியிருக்கின்றனர்..

ஆக, மக்களின் வாழ்க்கை முறையை குற்றம் சொல்வதை தவிர்த்து அவர்கள் போக்கில் விட வேண்டும்.. புனித யாத்திரைகளை மதமாக பார்க்கும் வழக்கத்தை விடுங்கள்.. மதம் என்ற சாரம்சமே மேற்கத்திய கிறித்துவ் இஸ்லாம் போன்றவைகளாலே வந்தது,, அதற்கு முன் நம் சமூகத்தில் மதம் என்ற ஒன்று இல்லை..

Post a Comment