சூக்கும சரீரம்…

Author: தோழி / Labels: , ,

இது உள்ளுடம்பு. இதைக்கொண்டு யாவற்றையும் உணர்ந்து கொள்ளலாம். தொலைவில் நிகழ்வதைப் பார்க்கலாம், கேட்கலாம். அப்படிப் பார்ப்பதும் கேட்பதும் புறத்தே உள்ள கண்களாலோ கதுகளாலோ அல்ல, சூக்குமமான அந்தக்கரண அறிவால், அவை அனுபவம் ஆகும்.

சூக்கும சரீரம் ஒளி பொருந்தியது, இந்த ஒளி தூய எண்ணம், தூய சொல், தூய செயல், இவற்றால் வருவதேயாகும். அது அறிவினால் சிறப்புப் பெற்றவர்களிடம் பொன்னிற ஒளியாகவும், பண்பால் சிறப்பு பெற்றவர்களிடம் வெண்ணிற ஒளியாகவும் விளங்குமாம்.

மூலாதாரத்தின் முக்கனலில் உருவாகிறது சூக்கும உடம்பு.

சித்தர்கள் சூக்கும தேகத்தை தூல தேகத்திலிருந்து பிரித்துக் கொண்டு விரும்பிய இடத்திற்குச் சென்று வந்து மீண்டும் தூல தேகத்துடன் பொருத்திக் கொள்வராம்.

இந்த சூக்கும தேகமானது தூல தேகத்தை பிரிந்தால் தூல தேகம் இயக்கமற்று நின்று விடும். இப்படி சூக்கும தேகம் பிரிதலே மரணம் எனப்படும்.

இந்த தூல தேகத்திலிருந்து பிரிந்த சூக்கும தேகத்தை , சூக்குமதேகத்திலிருந்து பிரிந்த வேறொரு தூல தேகத்தில் போருத்துவதையே கூடு விட்டு கூடு பாய்தல் என்பர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

ஜீவன்சிவம் said...

இன்னும் சுவராசியமான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்கும்

Unknown said...

:-)

chandru2110 said...

புரிகிறது, தொடருங்கள்.

R.Gopi said...

//தூல தேகத்திலிருந்து பிரிந்த சூக்கும தேகத்தை , சூக்குமதேகத்திலிருந்து பிரிந்த வேறொரு தூல தேகத்தில் போருத்துவதையே கூடு விட்டு கூடு பாய்தல் என்பர்//

இன்னும் விளக்கலாமே தோழி... பாலகுமாரன் அவர்கள் ஆதிசங்கரர் பற்றி எழுதிய நூலில் இதை படித்தது...

கிளியனூர் இஸ்மத் said...

சித்தர்களின் பாடல்களையும் பதிவாகப்போடுங்களேன்.....

ஞானவெட்டியான் said...

//மூலாதாரத்தின் முக்கணலில் உருவாகிறது சூக்கும உடம்பு//

மூலாதாரம் எது?
முக்கணல் அல்ல முக்கனல் எவையெவை?
சூக்கும உடல் எவ்வபடி உருவாகிறது?

அருள்கூர்ந்து விளக்கவும்.

ஞானவெட்டியான் said...

நன்றி தோழி.
குற்றம் கண்டுபிடிப்பது எமக்குத் தேவையற்ற ஒன்று. மாற்றுக் கருத்துக்களையும் இட்டுத் தங்களின் ஊக்கத்தைக் கெடுக்க விருப்பமில்லை. தொடர்க.

எனினும் இவையிவை விளக்கப்படலாமேயெனும் ஆதங்கத்தில் இட்ட கருத்துப் பின்னூட்டமே!

Ravi said...

Ravi:
Please add suitable pics (can get it from net) in each topic and where ever necessary.
First time i am visiting this blog. Really interesting. One of my fav. topics are covered here.
All the best.

Sekar said...

வாழ்த்துகள் ! உங்கள் நலப்பணி தொடரட்டும் !

ganges said...

வாழ்க வளமுடன் தோழி
நன்றாக உள்ளது சூக்கும தேகம் பற்றி இன்னும் விளக்கங்கள் எதிர் பார்க்கின்றேன் .....
வாழ்த்துக்கள்

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

anbu said...

அருமை

Post a comment