சரீரங்கள்...

Author: தோழி / Labels: , ,

உயிரைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது உடம்பு. இந்த உடலை தூல சரீரம் என்று அழைப்பர். உள்ளுடம்பை சூக்கும சரீரம் என்று அழைப்பர்.


தூல சரீரம்..

உடம்பின் பயன் அறிவை உண்டு பண்ணுவது. இந்த உடம்பு பலவிதமான உணர்ச்சிகளைப் பெற்று மகிழ்கிறது. இவற்றில் எதுஅழியும் உணர்வு, எது அழியா உணர்வு என்பதைப் பகுப்பாய்வு செய்து அழியா உணர்வை அறிவதே அறிவுடையோர் செய்கின்ற கடமை ஆகும்.

பொதுவாக மனிதர்களை மூன்று வகையாக சித்தர்கள் சொல்வார்கள் அவையாவன,

சகலர் :- உடலறிவை மட்டும் பெற்றவர் சகலர் என்றும்,

பிரளயாகலர் :-
உயிர் வாழும் பொது தேவர்களை எண்ணி வாழ்ந்து விட்டு, உயிரிழந்த பிறகு அந்நிலையைப் பெறுபவர்கள் பிரளயாகலர் என்றும்,

விஞ்ஞானகலர் :- உடல் உள்ளபோதே தேகத்தைப் பற்றி அறிந்து சூக்கும தேகத்தை வசப்படுத்தி அதில் முளுநினைவுடன் செயல்ப்படும் ஆற்றல் கைவரப் பெற்று தேகத்தை விட்டு வாழும் வல்லமை பெற்றவர்களே விஞ்ஞானகலர் என்றும் சித்தர்கள் அழைப்பர்.

இந்த உடம்பு ( தூல சரீரம் ) உணவினால் உருவாக்கப் பட்டது, உணவால் பிழைத்திருக்கிறது, இந்த உடம்புக்கென்று உறுதியான குணமும் இல்லை அறிவும் இல்லை, நிலையற்ற இந்த உடலையே "நான்" என்று பலரும் அறியாமையால் கருதிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உண்மையிலேயே நிலையானது சூக்கும சரீரமே..

அந்த சூக்கும சரீரம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

chandru2110 said...

அருமையான விளக்கங்கள்.

மாயாவி said...

மிகவும் அருமை! நல்ல தகவல்கள்.

rajsteadfast said...

அருமையான பதிவுகள். மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

அண்ணாமலை..!! said...

தூலம் தொலைத்து சூக்குமம் அடைவது பற்றிய‌
நல்ல கட்டுரைகள் வாழ்க‌..

R.Gopi said...

//இந்த உடம்பு ( தூல சரீரம் ) உணவினால் உருவாக்கப் பட்டது, உணவால் பிழைத்திருக்கிறது, இந்த உடம்புக்கென்று உறுதியான குணமும் இல்லை அறிவும் இல்லை, நிலையற்ற இந்த உடலையே "நான்" என்று பலரும் அறியாமையால் கருதிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உண்மையிலேயே நிலையானது சூக்கும சரீரமே..//

அருமை...அருமை... உங்கள் வலையை படிப்பதில் எனக்கு ஒரு தனி ஆனந்தம்...
தெரியாத பல விஷயங்களை தெளிவு படுத்துவதால்...

வாழ்த்துக்கள் தோழி...

hai_cha70 said...

//ஆனால் உண்மையிலேயே நிலையானது சூக்கும சரீரமே.///.எப்படி சூக்குமம் நிலையானது கொஞ்சம் விழக்கமுடியுமா,
காரண சரீரம்,மகாகாரண சரீரம் வரை நிலையற்றவை என்றுதான் கேள்வி பட்டமாதிரி தோணுது,

NATURE said...

Its like Astral Travel?

Sivanthi k said...

சகோதா¢, ஸ்தூல சா£ரத்தை மிக எழிதாக ஊன் உடம்பில் இருந்து பி¡¢க்க முடியும். சில சமயம் இயல்பாக இது நடக்கும் , ஆனால் விழிப்புணர்வு இன்மயால் நாம் அறிவது இல்லை. மேலும் பல சித்திகள் ஸ்தூல சா£ரம் மூலம் ஆட முடியும். ஸ்தூல சா£ரம் மூலம் ஒருவர் பார்கும்பொது அவர் மற்றவா¢ன் ஸ்டூல சா£ரம் ஐ பார்க முடியும். மேலும் சகோதா¢, உண்மயான வாழ்வு சூட்சும சா£ரம் ஐ தொடர்புடயது. ஸ்தூல சா£ரம் ஐ சூத்கும சா£ரம் பார்கும் நெரம் உண்மயன ஆன்மிக பயணம் தொடங்குகிரது.

Post a Comment