இரசமணி கட்டும் எளிய முறைகள்...

Author: தோழி / Labels: ,

”பாரப்பா சூதங்கட்ட
பட்சமா யொன்று கேளு
வீரப்ப தாளிச் சாறு
விட்டுணு கிரந்தி சாறு
சேரப்பா ஒன்றாய்க் கூட்டி
சுரிங்கிடச் சூதம் கட்டும்
ஆரப்பா சொல்லப் போறா
ரடையலாம் சித்தி பாரே”


கருவூரார் சொல்லும் வழி இது…

பொருள் :-
சூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும்.


“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு
முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு
காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்
ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்”


போகர் சொல்லும் வழி இது…

பொருள் :-
சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.


“காணும் சுத்தம் செய்த சூதம்
கட்டவே நீகேளடா
பூணு மஞ்ச ணாதிலை
பிழிந்த சாறு சுருக்கிட
வேணு மிரண்டு நாழிகையில்
மெழுகு போலுருண்டிடும்”


பொருள் :-
சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.

இவையே ரச மணி கட்டும் இலகுவான வழிகளாகும்.


இந்த இரசமணி பற்றி சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான விடையம் என்ன வென்றால், பொதுவாக இரசமணி என்று சில போலி மணிகள் விற்பனையில் உள்ளதால் தூய ரசமணியைக் கண்டறிவது எப்படி? இதையும் சித்தர்கள் சொல்லியே சென்றுள்ளனர்.

எப்படித் தூய இரசமணியை க் கண்டறிவது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

chandru2110 said...

இவை எளிமையாதான் தெரிகின்றன. ஆனால் இதற்கான மூலிகைகள் சுலபமாக கிடைக்குமா என்றுதான் ஐயம்.

Kandumany Veluppillai Rudra said...

பயனுள்ள பதிவுகள்,விளக்கம் குறைவு

Anonymous said...

மஞ்சணாதி என்றால் என்ன மூலிகை?
தற்கால பெயர் என்ன ?
கொழும்பில் எங்கு பெற்று கொள்ளலாம்???
கூற முடியுமா ???
நன்றி

Annadhana Seva Sangam said...

valga valamudan

tablasundar said...

good work pl sontinue

http://machamuni.blogspot.com/ said...

மஞ்சனாத்தி இலை என்பது மஞ்சனத்தி இலை,என்று அழைக்கப்படும்,நுணா இலையே இதன் அறிவியல் பெயர் மொரிஞ்சி சிட்ரிபோலியா குடும்பத்தைச்சேர்ந்தாகும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்.

Unknown said...

????????????????¿

Ocularist Zechariah's said...

6 months I am still unable to find the answer to make rasamani

sathish said...

மஞ்ச நத்தி என்றால் நுனாமரம்... நோனி என்ற பானம் தயாரிக்க பயன்படும் மரம்

Post a Comment