பிறந்தவர் இறக்காமல் இருக்க முடியும்...

Author: தோழி / Labels: , ,

உலக இன்பங்கள் அனைத்தும் சிற்றின்பம் என்றால், பேரின்பம் என்பது எது? சித்தர்கள் அதற்கும் பதில் சொல்கிறார்கள். ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலக்கும் இன்பமே பேரின்பம், இது முடிவில்லா இன்பம் என்கிறார்கள். இந்த பேரின்பம் கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலைமை வரவேண்டும் என்று பட்டினத்தார் சொல்கிறார்....

"பிறவாதிருக்க வரம் தரவேண்டும; பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண் இது எப்படியோ
அறமார் புகழ்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே..!"


ஒரு முக்கியமான விஷயத்தை இந்தப் பாடலில் பட்டினத்தார் எடுத்துக்காட்டுகிறார். பிறந்து விட்டால் இறவாமல் இருக்க மருந்து உண்டு என்று சொல்கிறார். இதிலிருந்து சித்தர்கள் சூட்சும சரீரத்தில் இந்த அடிப்படையில் வாழ்கிறார்கள் என்பது தெளிவுபடப் புரிகிறதே....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

5 comments:

chandru2110 said...

ஆம், நானும் இதை ஒப்புக்கொள்கிறேன். சூட்சும சரீரம் பற்றி தெரிந்தால் கூறுங்களேன்.

thirumandhiram said...

"அறமார் புகழ்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே..!"

தில்லைத் திருக்கூத்தனின் தூக்கிய திருவடியிலே தன்னை இழந்தவர்கள், வள்ளலார் போல் மரணமிலா பெருவாழ்வு பெறுவர்.

revathi said...

ungaluku atharkana vazhi theriuma therindal engalukum kurungalen

pattu said...

Please tell me that way. this is my mail ID keerthi_52@yahoo.com. Any message sent me above mail ID

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Post a Comment