ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி...

Author: தோழி / Labels: , ,

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.
இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்....

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ..??

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

chandru2110 said...

பாடல் சுவையாக உள்ளது.

Unknown said...

கால்காட்டி,கைகாட்டி,கண்கள் முகங்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்துஇருப்பது எக்காலம்,,,
- பத்திரகிரியார்

தேவன் said...

பாரட்டுக்கள் தோழி, நீங்கள் வேகமாக இருக்கிறீர்கள். நிறைய விஷயம் பகிர்ந்தளிக்கிறீர்கள்.

சசிகுமார் said...

சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியல, முடிந்தால் அந்த அர்த்தங்களை எனக்கு கூறவும் நல்ல பதிவு

R.Gopi said...

//அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. //

பெயர் விளக்கம் மிக்க நன்று தோழி... மேல் விபரங்கள் தரலாமே...

Flower said...

@தோழிUNGAL PATRI THERINTHU KOLALAMA?

Faiz said...

அறுமையான செயல் தொடருங்கள்,மற்றும் என்னிடம் உள்ளவற்றையும் சமயம் வரும் போது தங்களுக்கு உங்கள் mail ac அனுப்புகிறேன்
Thank you friend

Faiz said...

May i know y

Faiz said...

Thank you

Post a comment