சித்தர்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்…?

Author: தோழி / Labels: ,

சிவனையே சித்தராக எண்ணிய சித்தர்கள் சிவபெருமானுக்குரிய தோற்றத்தையே தாமும் புனைந்தனர். சிவபெருமானின் தோற்றத்தைக்கூறும் பரஞ்சோதி முனிவர் தலையில்கற்றைச்சடை, மார்பில் முப்புரி நூல், உடல் முழுவதும் திருநீறு, செவிகளில் தோடு, இடையில் புலித்தோல் ஆடை, தோளில் திருநீற்று பை, கழுத்தில் மணி மாலைகள், ஒரு கையில் மழு, மறு கையில் பொன் பூணிட்ட பிரம்பு என்ன தோற்றமளித்ததாக குறிப்பிடுகின்றனர்.

சித்தர்கள் என்னும் பெயரில் பலர் புறத்தோற்றத்தையே பெரிதும் மேற்கொண்டு நெஞ்சில் வஞ்சனையோடு போலிகள் பலர் வாழ்ந்தனர். அவர்களையும் சித்தர்கள் விட்டு வைக்கவில்லை மக்களுக்கு அடையாளம் காட்டியே சென்றனர்.
“தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தாவடம் பூண்
டூனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென் பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவர் கோடி
காரணத்தை அறியாமல் கதறுவாரே

- என்று கருவூராரும்,
“சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசயந் தன்னைச் சுற்றி
இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெல்லாம் பெண்ணாசைப் பூசைதானே”

- என வால்மீகரும்,

"சித்த ரென்றுஞ் சிரியர் ரென்றும்
அறியா ணாத சீவர்கள்
சித்த ரிங்கி ருந்தபோது
பித்த ரென்றே எண்ணுவீர்
சித்த ரிங்கி ருந்துமென்ன
பித்த னாட்டி ருப்பரே
அத்த னாடு மிந்தநாடு
மவர்க ளுக்கே லாமொன்றே"

- என்னச் சிவவாக்கியரும் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக சித்தர்கள் உணவு, உடை, உறையுள் என்பன பற்றிக் கவலைப் படாதவர்கள். இவர்கள் பற்றற்றவர்கள். யார் பேச்சையும் செவிமடுக்காதவர்கள், யாருடனும் பேசாதவர்கள். ஞானம், இரசவாதம், சமாதி நிலை கைகூடியவர்களிடம் உறவு கொண்டு இருப்பவர்கள்.

சித்தர்களின் செயல்களில் முதன்மையானது சமாதியில் இருத்தல் ஆகும். உண்ணாமல், உறங்காமல், இடம் பெயராமல், வெய்யில், மழை, பகல் இரவு பாராமல் இருப்பதே சமாதிநிலை. அவ்வாறு சமாதியில் இருந்து தாம் பெற்ற ஞானத்தை, பட்டறிவை மக்களுக்கு எடுத்துரைப்பவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

sury said...

கவி நயா வலைப்பதிவு வழியே தங்கள் பதிவு காண வந்தேன்.

சித்தர்கள் பற்றி விளக்கமாகவும், குறிப்பாகவும் தங்கள் பல பதிவுகளில் கண்டேன்.
உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

உருத்திரா said...

சித்தர்கள் பற்றிய பதிவு,இன்றைய தலை முறைக்கு அவசியம்.
சித்துக்கள் காட்டும் சாமியாரை,நினைக்கத்தான் பயமாக இருக்கிறது

spiritual ocean said...

சித்தர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.சித்தர்களைப் பார்க்க வேண்டுவோர் www.aanmigakkadal.blogspot.com வலைப்பூவிற்கு வருகைதரவும்.இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால்,நீங்கள் ஒவ்வொருவராலும் நீங்கள் விரும்பும் சித்தரை நேரில் சந்தித்து பேச முடியும் என்பது அனுபவ உண்மை.

Nithyam23 said...

@spiritual ocean Thaangal sollum murai, aanmiga kadal blog spotl enganam ulladhu enpathai theriyapaduthamudiyuma.?nanri

ஞானவெட்டியான் said...

ம்ம்ம்ம்ம்
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.

kalavum kattrum ara said...

மிக நல்ல கருத்துகள் ... தொடர்ந்து வரவேற்கிறோம் .......

Raja Subramaniam said...

ஹர ஹர மஹா தேவ சம்போ... பணி தொடர வாழ்த்துக்கள்

moharn said...

மிகவும் நன்றாக உள்ளது பணி தொடர வாழ்த்துக்கள்.

Selvan From Jaffna

செவுந்தலிங்கன் said...

@moharnமிக நல்ல முயற்சி

Post a Comment