காயகற்ப முறை - 03

Author: தோழி / Labels: , , ,

"கண்டிலேன் கற்பூர வில்வந்தானும்
கடிந்தரைத்துப் பாக்களவு பாலிலுண்ணு
அண்டில்லா அக்கினியை தானவிக்கும்
அழுந்துகின்ற மேகமெல்லாம் சாடிப்போகும்
மண்டிலேன் வாதபித் தத்தை நீக்கும்
வாய்நீர்தான் மிகூறல் வற்றிப்போகும்
வெண்டில்லா மேனி சரசரப்புப்போகும்
மிக்கன வெள்ளெழுத்து மீறிடாதே"


- போகர் -

கற்பூர வில்வம் எனும் மூலிகையை எடுத்து நன்றாக அரைத்து பாக்களவு எடுத்து பாலுடன் சேர்த்து ஒருமண்டலம் மாலை வேளையில் உண்டால்.உடம்பிலுள்ள சூடு இல்லாது போவதுடன், வாதம் , பித்தங்களையும் போக்கி உமிழ் நீர் அதிகம் சுரப்பதும் நின்றுவிடும் அத்துடன் உடம்பிலுள்ள நோய்க்காரணிகள் அனைத்தும் இல்லாது போகும், ஆனால் பத்தியம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று போகர் சொல்கிறார்.>

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயகற்ப முறை - 02.

Author: தோழி / Labels: , , ,

"திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக்கொணர்ந்து
மண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கறுத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்
இறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகியேறும்
ஏற்றமாஞ் சுழிமுனையும் திறந்துபோமே"


- போகர் -

விஷ்ணு கிராந்தி என்னும் செடியை எடுத்து (வேர்ப் பகுதியைத் தவிர்த்து) பால் விட்டு அதை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பாக்களவு எடுத்து தினமும் மாலை வேளைகளில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிட்டு வந்தால் மறந்து போன நினைவுகள் எல்லாம் திரும்பவருவதுடன் ஞாபகசக்தி அதிகரிக்கும், கண்பார்வையானது ஒரு யோசனை தூரம் வரை பார்க்கும் சக்தியைப் பெறும், உடம்பு கறுத்து ஒளிபெற்று மின்னும், சுவாசம் சிறப்பாக செயற் படுவதுடன், சுழிமுனை நாடியும் சிறப்பாக தொழிற்படத் தொடங்குமாம் என்கிறார் போகர்.

முக்கிய குறிப்பு :-

இதை சாப்பிடும் போது பத்தியம்(உணவு கட்டுப்பாடு) மிக அவசியம். எவற்றையெல்லாம் உணவில் தவிர்க்க வேண்டுமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயகற்ப முறை - 01.

Author: தோழி / Labels: , , ,
"வயிரமாம் நெல்லிமுள்ளி தனைவாங்கி
மருவ நன்றா யிடித்துமே யெடுத்து
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரந்தான்
அதற்க்கெட்டுப் பங்கு ஒன்றுசேர்த்து
துயிரமாந் தேன்தன்னில் குழைத்துண்ணு
சுகமாக மண்டலந்தான் உண்டாயானால்
கைரமாங் காயமது கருங்காலிக்கட்டை
கனல்போலே சோதியாய்க் காணும்காணே"


- போகர் -

நெல்லி வற்றலைத்தான் “நெல்லி முள்ளி” என்பர். இதே போல செந்தூரமும் தேவைப்படும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெல்லி வற்றலை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும். இப்போது எட்டு பங்கு நெல்லி வற்றல் பொடியுடன்,ஒரு பங்கு செந்தூரத்தை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மாலை வேளையில் அரை ஆழாக்கு அளவு எடுத்து சுத்தமான தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

இம்மாதிரி தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பானது கருங்காலிக் கட்டை போல இறுகி நெருப்புபோல் செம்மையாக மின்னும் என்கிறார் போகர்.

முக்கிய குறிப்பு :-

இதை சாப்பிடும் போது பத்தியம்(உணவு கட்டுப்பாடு) மிக அவசியம். எவற்றையெல்லாம் உணவில் தவிர்க்க வேண்டுமென முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...

Author: தோழி / Labels: , ,

"யோகமாம் புளியுப்பு எண்ணெய் சுண்ணம்
உரிசையா மாங்கிசங்கள் மச்சமாகா
மோகமா மோரோடு கடுகு உள்ளி
முதிரான காரமமொடு பெருங்காயந்தான்
போகமாய் பெண்ணுட புணர்ச்சியோடு
பேரான நித்திரையும் சோம்பல் தள்ளி
வாகமாம் வாசிதனை மறித்துக் கொண்டு
மறவாமல் இரவு பகல் மனது உன்னே"


புளி, உப்பு, எண்ணைவகை, மோர், கடுகு, உள்ளி, மது, மங்கை, மாமிசம் புசித்தல், அதிக காரமும், பெருங்காயமும், நேரம் தவறி உறங்குதல், சோம்பல்குணம், இரவு பகல் எந்நேரமும் காய கற்பம் உண்பதை நினைத்திருந்து இவற்றை கட்டாயம் நீங்க வேண்டும்.

"உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒருசேர சமைத்துண்டு ஒரு போதையா
பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு
பணியாரம் சிறு பயறு பழமும் தேனாம்
குன்னியே கோரக்கர் கற்பமாகும்
போமென்ற புளிமேல் ஆசையானால்
புளியாரை புளியரணை சீக்காய்க்கொழுந்து
நேமென்ர நெல்லிக்காய் பசலைக் கீரை
நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு
ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும்
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே"


பால், நெய், சிறு பயறு வகை, பழங்கள், தேன் கற்பத்திற்கு உண்ணக் கூடியவை என்றும், புளி சேர்க்காமல் சாப்பிட முடியாதவருக்கு புளியாக் கீரை, பசலைக் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், கரும்பும், இளநீரும் , குளிர் நீரும் சேர்க்கக் கூடாது என்றும் போகர் சொல்கிறார்.

மேலும் கற்பம் உண்ணும் காலத்தில் குடிப்பதற்க்கு நீர் தயாரிக்கும் முறை ஒன்றும் சொல்கிறார்கள் சித்தர்கள். அது அருகம்வேர் ஒரு கை அளவும், மிளகு 25 தும் சேர்த்து இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை விட்டு அதை எட்டில் ஒன்றாகக் காய்ச்சி, வடிகட்டிப் பருகலாம் என்கிறார்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காய கற்பம் பற்றி...

Author: தோழி / Labels: , , ,பொதுவாகச் சித்தர்கள் நீடூழி காலம் வாழ்வதற்காக செய்யும் மருந்தின் பெயர் தான் காய கற்பம். இதற்க்குச் சரகா மருந்தென்றும் சொல்வார்கள். இது உடம்பைப் பலப் படுத்தி, சாகாமல் இருக்கவும், மூப்பு, பிணி, பசி , இளைப்பு, தாகம், நித்திரை போன்றவைகள் வராமலும், எப்போதுமே உடல் இளமையுடன் இருக்கவும் அவர்கள் உண்ட மருந்தே இந்தக் காய கற்பமாகும்.

இதற்கான மூலிகைகளும், இந்த கற்ப மருந்தை தயாரிக்கும் முறைகளையும், சாப்பிட வேண்டிய நேர காலத்தையும், சித்தர்கள் அவரவர் அனுபவங்களுக்கேற்ப கூறியுள்ளனர். இவற்றை அவர்கள் வைத்திய காவியங்களில் விளக்கியுள்ளனர்.

"கற்பத்தை யுண்டல் காயமழியாது
கற்பத்தினாலே காணலாம் கலையை
கற்பத்தினாலே காணலாம் சோதியை
கற்பத்தினாலே காலையும் கட்டி டே
கட்டிட சித்தாம் காயப் பரீட்சை"


- என்கிறார் சட்டை முனி.

இதுபோல காய கற்பம் சாப்பிட்டவர்கள் உடல் எப்படி இருக்கும் என்று கோரக்கர் சொல்கிறார்,

"காலமதில் கடியரவம் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா
நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்"


"வேலணைய கத்திவாள் வேட்டுமேறா
விடந்தலை மேல் கொண்டவனும் விமலி
சீலமுடன் ஞாணப் பால் தந்து காத்தே
ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!"


- என்பார் கோரக்கர்.

இப்படியாகப் பட்ட இந்த காய கற்ப மருந்து செய்யும் முறைகளைப் பல சித்தர்கள் பல விதங்களில் சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் இங்கு பதிவது படிப்பவர்களினதும், எழுதும் எனதும் கால நேரங்களை விரயமாக்கும் என்பதால், தற்காலத்தில் எல்லோராலும் இலகுவாகச் செய்யக் கூடிய சில வழிகளை மட்டும் சொல்லவிருக்கிறேன்..

அடுத்த பதிவில், இந்த காய கற்ப மருந்து உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய பத்திய முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சாகாக் கலை எனப்படும் காயகற்பம்....

Author: தோழி / Labels: ,
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"

- திருக்குறள் -

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம், என்பார் திருவள்ளுவர்.

இந்த நிலையாமையை நீக்க எந்த வழியும் இல்லையா?

நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் இவைகளை எந்த அறிவியல் மேதைகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஏன் முடியாது? முடியும் என்றால் எப்படி?


இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டவர்களும், இவற்றிலிருந்து மீண்டவர்களும் சித்தர்கள் மட்டுமே. பிணியையும், மூப்பையும் வெல்லவும், இளமை குன்றாமலும், மரணம் அண்டாமலும் தங்கள் உடலைப் பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே.அந்த வழிகளை மக்கள் பயன்பெற பாடல்களில் எழுதியும் வைத்தனர். இவ்வாறு தங்கள் உடலைப் பேணும் சித்தர்களின் முறையே சாகாக் கலை எனப்படும் காயகற்ப முறையாகும்.

காயம் என்றால் உடல் கற்பம் என்றால் அழியாது வைத்திருக்கும் மருந்து. ஆகவே உடலை அழியாது வைத்திருக்கச் செய்வதே காயகற்பம் எனப்படும்.

"சாவாதிருந்திடப் பால்கற - சிரம்
தனிலிருந்திடும் பால்கற
வேவாதிருந்திடப் பால்கற - வேறு
வெட்டவெளிக்குள்ளே பால்கற!"

- என்பார் இடைக் காட்டுச் சித்தர்


இனி,

உடலை அழியாது பேண, அதாவது நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பவற்றிலிருந்து உடலைக் காக்க என்ன என்ன காயகற்ப முறைகளைச் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ரசவாதம் செய்யும் இன்னுமொரு முறை...

Author: தோழி / Labels: , , ,
"எட்டான போன்னத்துவத்தை தகடடித்து
எழிலாய்ப் புடமிட்டால் தங்கமாகும்
கட்டான தங்கமது என்ன கூறுவேன்
காசினியில் நாதாக்கள் கண்ட தங்கம்
பட்டான தங்கமதை பூசை கொள்வீர்
பாங்கான சிவபூசை உறுதி காண்பீர்
மட்டான தங்கமென்று எண்ணவேண்டா
மகத்தான குருபூசைத் தங்கமாமே"


என்று ரசவாதம் செய்யும் முறை ஒன்று சொல்கிறார் கருவூரார்.

"பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் பிறந்தது பேராத் துரிசியில்
பொன்தான் பிறந்தது புகழான கற்ப்பத்தில்
பொன்தான் உபதேசப் போக்கில் பிறந்ததுவே"


என்றும்,

"செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே"


என்று சொல்வதோடு ரசவாதம் பற்றிச் சொல்வதை நிறுத்திக் கொள்கிறார் திருமூலர்.

மற்ற சித்தர்கள் எல்லாம் தங்கள் ரசவாத முறையில் ஏதாவது ஒரு செய்முறையை மறைத்தார்கள் என்றும்,அவர்கள் மறைத்தவை என்ன என்று அகத்தியர் தனது சீடர்களுக்கு விளக்கி இருக்கிறார். அப்படி அவர் விளக்கிய பாடல்களின் ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

"வேதிக்கக் கொங்கணவர் எழுகடை என்றார்
விளக்காமல் இது ரெண்டை மறைத்துப் போட்டார்"


என்று கொங்கணவர் மறைத்த ரகசியத்தை வெளியிடும் அகத்தியர்,

"ஆச்சப்பா கருவூரான் கடுங்கா நீரும் ஆதி
என்ற வழலை உப்புத் தீட்சை மறைத்தார்"


என்று கருவூரார் மறைத்ததையும்,

"பாரப்பா கோரக்கர் கருக்கிடையை மறைத்துப்
பாடினார் கருக்கிடைதான் ஏதென்றாக்கால்"


என்று கோரக்கர் மறைத்ததையும் தனது சீடர்களுக்கு சொல்லும் அகத்தியர்,

"நேரப்பா வாசமுனி மறைத்த சூத்திரம்
நிறைவான சுண்ணம் தான் ஏதென்றாக்கால்"

என்று வாசமுனி மறைத்த சூத்திரத்தையும்,


"கேள் மக்காள் பிரம முனி மறைத்த சூத்திரம்
பிசகாமல் செப்பு சுத்தி மறைத்துப் போட்டார்"


என்று பிரம முனி மறைத்த சூத்திரத்தையும், இன்னும் மற்ற சித்தர்கள் மறைத்தவைகளையும் தனது சீடர்களுக்காக அகத்தியர் விளக்கி இருக்கிறார் தனது நூல்களில்.

நானும் இத்துடன் ரசவாத விளக்கங்களை நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ரசவாதம் செய்ய அகத்தியர் சொல்லும் முறைகள்...

Author: தோழி / Labels: , , ,"கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே"


என்று ஒரு முறையையும்,

"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"


என்று ஒரு முறையையும்,

"சொன்னாலும் நீர் கேளீரே
சும்மா சுவர் போல் இருந்தீரே
பொன்னா பொன் ஆவரையுடன்
பொன்னும் அத்தனை மாலைச் சாற்றால்
கன்னார் பேதி சிலை ரசம்
காந்தம் வெள்ளியும் தானுருக்க
என்னாம் என்னாம் என்னாதே
பொன்னாம் பொன்னாம் பொன்னாமே"


என்று ரசவாதம் செய்யும் முறைகளைச் சொல்லும் அகத்தியர், இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

"எண்ணான வேதைகோடி
உத்தமர்க்குக் கிட்டும் அல்லல்
உண்மையாம் சான்றோர்க்கும்
தயை குணம் உள்ளோருக்கும்
தன்மையாம் மொழிகள் கூறி
உகந்ததுமே பணிந்திட்டோர்க்கும்
வண்மையாம் மனமுள்ளோர்க்கும்
மேன்மையாம் பலிக்கும் தானே"


எண்ணிக் கணக்கிடமுடியாத கோடிக் கணக்கான ரசவாத முறைகள் உள்ளன, அவை உத்தமர்களுக்கும், உண்மையான சான்றோருக்கும், இரக்க குணமுள்ளோருக்கும் , உண்மையான தொண்டருக்கும், நல்ல மனம் உள்ளவருக்குமே பலிக்கும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத முறை...

Author: தோழி / Labels: , ,
தனது குருநாதர் மூலிகை ஒன்றின் மூலம் இரும்பைத் தங்கமாக்கிக் காட்டியதாக அகத்தியர் சொல்கிறார்.

"விந்தையான குருத்தங்கம்
விளம்பும் சொல்லை குருநாதன்
செத்தை பெருக்கித் தானெடுத்து
தென்னை மரத்தின் கீழாக
சத்தையுடைய மூலிதனை
சதிராய்ப் பிடுங்கி இரும்பிலிட்டு
மேத்தையாகச் சில்லிட்டு
மூடிப் புடமும் போட்டாரே"


"போட்ட புடத்தைச் சாணானும்
புகழாய்த் தென்னைமரச் சோலை
தொட்டமுடனே பாத்திருந்த
நொண்டிச் சாணான் கண்டறிந்தான்
வாட்டமுள்ள பொன் அதுவை
வாசாய்க் கண்டான் சோலைமகன்
தாட்டிகமாய் தானும் வந்து
சதுராய் எண்ணம் கொண்டானே"


"கொண்டான் கையில் ஆயுதத்தை
கூறாம் கத்தி தனை எடுத்து
கண்டாற் போல தழைஒடித்து
கருவாய்க் கத்தி மேல்பூச
அண்டாதங்கம் என்ன சொல்வேன்
அப்பா சாணன் வாதமப்பா
கொண்டா மணியாம் தங்கமப்பா
கேவன தங்கம் இதுவாமே"


- அகத்தியர் பாடல் -

குருநாதர் தனக்கு செய்து காட்டிய இரும்பை தங்கமாக்கும் முறையை விளக்கும் அகத்தியர் இறுதியில், குருநாதர் இரும்பைத் தங்கமாக மாற்றிக் காட்டியபோது அருகில் இருந்த தென்னஞ் சோலையில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாணான் என்பவன், அந்த மூலிகையை எடுத்து அரைத்து சாறை தன்னிடமிருந்த கத்தியில் பூச கத்தியானது தங்கமாய் மாறியதாம். அதனால் இந்த இரசவாத முறைக்கு "சாணான் வாதம்" என்று பெயர் வந்தது என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ரசவாத முறை ரகசியமாகப் பேணப்படுவதேன்...

Author: தோழி / Labels: ,

தூய்மையற்றவர்கள், மூடர்கள், பாவிகள் போன்றோரிடம் தமது நூல்கள் கிடைத்தால் என்ன ஆகும் என்பது சித்தர்கா அறியாததல்லவே.. ஆகவே அவர்கள் ஒருவித எச்சரிக்கையுடனேயே மறைபொருள் கொண்டு தமது நூல்களை எழுதினார்கள்.

"பாடுகின்ற சித்தருட நூல்கள் எல்லாம்
பரிபாசை தெரியாத பாவியோர்க்கு
தேடுகின்ற பொருள் அழியச் சொன்னதல்ல
தினையளவும் பொன்காணச் சொல்லவில்லை".


- அகத்தியர் பரிபாஷை -

பாடப்பட்டுள்ள சித்தர்களின் நூல்கள் எல்லாம் பாவிகளுக்குச் சொல்லவில்லை, தினையளவும் தங்கம் செய்வதற்காகவும் சொல்லவில்லை என்கிறார் அகத்தியர்.


"திரணமுமே தெரியாத மூடர்க்கு ஈந்தால்
பாவியாவாய்; இந்நூலை அவர்கட் ஈயாதே"


- நந்தி நூல் -

ஒன்றும் பிரித்தறிய முடியாத மூடர்களுக்கு இந்த நூலைக் கொடுப்பாயானால் நீ பாவியாவாய் என்று நந்தி நூல் சபிக்கிறது.

ரசவாத நூல் என்று ஒரு அரிய, மிகப் பழமை வாய்ந்த நூல் ஒன்று உள்ளது. அந்த நூல் ஆரம்பத்திலேயே இப்படி சொல்கிறது..

"சித்தர்களுக்ககவே இந்நூல் சொன்னேன்
சிவயோகி மெய்ஞானிக்கு இந்நூல் சொன்னேன்
பட்டற்று ஆய்குருவுக்குத் தொண்டு பண்ணி
கற்றோம் என்றிருந்த கடைப் பிள்ளைக்கு ஆகும்
கல்வி அறிவுல்லோருக்கும் ஈயல் ஆகும்
மட்றுல்லோர்க்கு இந்நூல் ஈந்தாயானால்
மாண்டிடுவாய் மகத்தான சாபம் எய்தே"


சித்தர்களுக்கும், சிவயோகிகளுக்கும், ஞானிகளுக்கும், பற்றற்று குருசேவை செய்து கல்வியே குறிக்கோளாகக் கடைப்பிடிக்கும் சீடர்களுக்கும், சிறந்த கல்வியறிவு உடையோருக்குமாகவே இந்நூல் எழுதப் பட்டுள்ளது, மற்றவர்களுக்கு இந்நூலை கொடுத்தாயானால் சாபத்தால் பீடிக்கப் பட்டு மரணமடைவாய் என்கிறது.

பாவிகளும், மூடர்களும், முரடர்களும், பேராசை கொண்டவர்களும் சித்த ரகசியங்களை அறியக் கூடாது என்பதில் சித்தர்கள் மிகவும் கவனமாக இருந்ததையே இவை காட்டுகின்றன. அப்படி அவர்கள் கவனமாக இருந்ததே உலக மக்கள் நன்மைக்காகத் தானே...

இனி நான் சித்தர்கள் எப்படி ரசவாதம் செய்தார்கள் என்பதை சொல்ல முன்...

இந்த ரசவாதத்தை நான் சொல்வது நீங்கள் எல்லோரும் தங்கம் செய்ய வேண்டும் என்பதற்க்காக அல்ல, ரசவாதம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்க்காக மட்டுமே. இதை முயற்சி செய்வதால் ஏற்படும் தீங்குகளுக்கும், விளைவுகளுக்கும் நான் பொறுப்பல்ல.

ஆகவே, நாம் இரசவாதம் செய்ய முயற்சிக்காமல், இதை ஒரு அறிதலாகக் கொள்வோம்.

ரசவாதம் செய்ய நாங்கள் ஒன்றும் ஞானியர் அல்லவே. எங்களுக்கு மதி மயக்கும் தங்கம் வேண்டாம். என்றும் நிலைக்கும் இறைவனின், இறை சொரூபமான சித்தர்களின் அருள் கிடைத்தால் போதும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் என்றால் என்ன?

Author: தோழி / Labels: ,இரசவாதம் என்பது தாழ்ந்த உலோகங்களை சில வேதியல் முறைகளைக் கையாண்டு முறைப்படி உயர்வகை உலோகங்களாக மாற்றுவதாகும்.

இந்த உலோக மாற்றத்தை சித்தர்கள் தங்கம் செய்யும் பேராசையால் செய்யவில்லை, அழியக் கூடிய உடம்பை அழியாமல் பாதுக்காக்கும் காயகல்ப்ப மருந்துகள் செய்யவே பயன்படுத்தினார்கள். இவ்வாறு இரசவாதம் காயகல்ப்ப மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் பட்டதே தவிர தங்கத் தயாரிப்புக்கு அல்ல. இதற்கு சித்தர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே உதாரணம். அவற்றை பின்னர் பார்க்கலாம்.

உலோகங்களைப் பொன்னாக மாற்றியது போக, கல்லையும் மண்ணையும் பொன்னாக மாற்றிய சம்பவங்களும் சித்தர்கள் வாழ்வில் நடந்தேறியுள்ளன.

உலோகங்களை மட்டுமே இரசவாதத்தால் தங்கமாக்கமுடியும் என்ற நியதியை மாற்றி கல்லையும் தங்கமாக மாற்றிக் காட்டியவர் கோரக்கர்.அதே போல் சிவவாக்கியார் வாழ்விலும் கல்லைத் தங்கமாக மாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சம்பவங்களை பின்னர் சொல்கிறேன்.

ஆனால், இந்த சித்தர் ஜாலங்கள் எல்லாமே மிகவும் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. அந்த ரகசியங்கள் மட்டும் வெளியாகி இருந்தால் தற்போதுள்ள மனிதர்களின் பேராசை பூமியிலுள்ள கல்லையும் மண்ணையும் கூட தங்கமாக மாற்றி விட்டிருக்கும்.

இந்த ரசவாத வித்தையை தற்போதும் பலர் முயற்ச்சி செய்து தொல்விகண்டதாக அறிய முடிகிறது. அப்படி தொல்வியாடைவதன் காரணம் என்ன? இந்த ரசவாதம் பற்றிய தகவல்கள் ரகசியமாகப் பேணப்படுவது ஏன்? இதை சரியாக செய்து வெற்றியடைய முடியாதா? இவ்வாறான கேள்விகள் எங்கள் மனதில் எழுவது இயற்கையே. இவற்றிற்கான பதிலையும் சித்தர்களே விளக்கி சொல்கிறார்கள். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்...

Author: தோழி / Labels: ,தங்கம் ஒரு அதிசயப் பொருள். மனித ஆசைகளின் மறுவடிவம், செல்வச் செருக்கின் சின்னம், இன்றைய உலகில் நமது பொருளாதாரத் தகுதியைச் சமூக அந்தஸ்தை மதிப்பிடும் பொருளாகத்தான் தங்கம் இருக்கிறது. தனிமனித அந்தஸ்தை மட்டுமல்ல நாடுகளின் தலைவிதியைக் கூட இந்தத் தங்கம் தான் நிர்ணயிக்கிறது.

சங்க காலத்திலே முற்றத்திலே காய்ந்து கொண்டிருந்த தானியங்களை உண்ணவரும் பறவை, விலங்குகள் மீது தங்க ஆபரணங்களை வீசியெறிந்து விரட்டிய தமிழ் நங்கையர் பற்றி இலக்கியங்களில் காணலாம். அதுமட்டுமல்லாமல் சங்கத் தமிழர்களின் தட்டு முட்டு சாமான்கள் கூட தங்கத்தில் இருந்ததாம் என்கிறது இலக்கியங்கள்.

இந்தச் செல்வச் செளிப்புத்தான் தமிழர் மீது அயல் நாட்டவர் பொறமை கொள்ள வைத்தது, அதனால் ஏற்பட்ட போர்கள் தான் எத்தனை எத்தனை, இவ்வாறு போர்களில் கொள்ளை அடிக்கப் பட்ட தங்க ஆபரணங்கள் தான் எவ்வளவோ...

தங்கம் உருவாக்கும் மாயாஜாலம் மட்டும் நமக்குத் தெரிந்துவிட்டால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும், என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உள்ளது தான். மறுப்பதற்க்கில்லை.

ஆதிசங்கரர் தனக்கு நெல்லிக் கனியை தானமிட்ட பெண்ணுக்கு பொன்மழையை பொழிய வைத்ததை பற்றி அறிகிறோம் இது எப்படி அவரால் முடிந்தது?

இதற்குப் பெயர் தான் சொர்ண ஜாலம். இந்த சொர்ண ஜாலம் என்பது தான் சித்தர்கள் சொன்ன இரச வாதம்.

இரசவாதம் என்றால் என்ன? எப்படி சித்தர்கள் இந்த இரசவாதம் செய்தார்கள்? எங்களாலும் இந்த இரச வாதம் செய்ய முடியுமா?

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வெறுக்கத்தக்க சில மனிதர்கள்...

Author: தோழி / Labels: , ,

வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க மனிதர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்பதை நாம் அறியவேண்டும், அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும். அம மனிதர்கள் யார் என்று பட்டினத்தார் சொல்கிறார், அனைவருக்கும் புரியும் விதமாக மிகத்தெளிவாக அம்மனிதர்கள் பற்றி சொல்கிறார்.

வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள், வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம், என்றாலும், விடமாட்டார்கள் , வலிய இழுப்பார்கள்.

நன்மைக்கு உதவி செய்யார், தீமை என்றால் அதற்கு உதவ தயங்கமாட்டார். தினந்தோறும், துன்பப்பட்டு வஞ்சகம் செய்து பணம் சேர்ப்பார், அந்தப் பணத்தை தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு கொடுத்து அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர். அதாவது தான் சாகும் வரை இப்படியே நாளைப் போக்குவர். இப்படிப் பட்ட மனிதர்கள் இவ்வுலகில் ஏன் பிறந்தார்கள், இறைவனே என்று பாடுகிறார்.

"வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
. . வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார்,
. . தினந் தேடி ஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடுவார்
. . விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா!
. . கச்சி ஏகம்பனே!"


சிலமனிதர்கள் உண்மை என்பதையே பேசி அறிய மாட்டார்கள், நல்லவர்களை ஒருநாளும் போற்ற மாட்டார்கள். நல்லோரை நிந்திப்பதையே கொள்கையை இருப்பார்கள். வசை பாடுவதற்கு இன்னார் என்று பாராமல் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே திட்டுவார்கள், வணங்க வேண்டிய தாயையே பழித்துப் பேசும் இவர்கள் பயங்கரமானவர்களே. நல்ல செயல்களைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்களை எந்த வம்பில் மாட்டி விடலாம் என்று சதா சித்தி திட்டம் போடுவார்கள். தமக்காக உளைத்தவர்களுக்குக் கூட உபகாரம் செய்யாத இவர்கள் இருப்பதால் எவருக்கும் லாபமில்லை, இவர்கள் இறந்தாலும் நட்டமில்லை என்கிறார் பட்டினத்தார்.

ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
. . நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம்
. . செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்;
. . தமைஅண் டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்தென்ன? போய் என்ன?
. . காண்! கச்சி ஏகம்பனே!


ஆகவே , இவ்வாறான மனிதர்களிடமிருந்து விலகி, மனித சமுதாயத்திற்கு உதவும் உத்தமர்களா வாழுங்கள், பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! என்கிறார் பட்டினத்தார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


செய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வது எப்படி...

Author: தோழி / Labels: , , ,

“பாரப்பா அனுமந்தன் வசியக் கட்டு
பகன்றிடுவேன் பதறாது உற்று நோக்கு
யாரப்பா அறிவார் இவரின் கூத்து
ஆணவத்தை வென்றவர்கள் அறிவாரப்பா
கூறப்பா ஓம் ஹரி ஆதி யென்று
குற்றமில்லா நாராயணா மேலும்
சேரப்பா அகிலாண்ட நாயகா வென்று
சொல்லிடுவாய் நமோ நமோ வென்றே
என்றுமே அனுதினமும் ஓதுமனுமந்தா
லெங்காபுரி ராவண சம்மாரா
சென்றுமே சஞ்சீவி ராயா மேலும்
சீக்கிரமே ஓடிவா உக்கிரமாவே ஓடிவா
வென்று நீ படித்து படித்து வரும்
விதமான பில்லி சூனியம் பேய் பிசாசும்
கொன்றுமே பிரம ராஷசிகளைப் பிடி பிடி
குலுங்க அடி அடி கட்டுக் கட்டே
கட்டிப் பின் வெட்டு வெட்டுக்
கதற கொட்டு கொட்டு நீ
முட்டி நீ தாக்கு தாக்கு ஓம்
மேலும் ஆம் மிளைய வனுமந்தா
கட்டி வா வா சுவா ஹா கூறு நீயும்
கட்டிய மந்திரந் தன்னை மைந்தா
மட்டில்லா பஞ்ச முறை சொல்லி பின்னே
மயங்காமல் நீறேடுத்து தூவு தூவே
தூவினால் திக்கெல்லாம் கட்டலாச்சு
துப்பரவாய் செய்வினையும் நீங்கலாச்சு
குறிப்புடனே யேதிராவார் எது தாழ்வே
பாவி தானாக்கால் யேது மேன்மை ”


அனுமாரின் வசியக் கட்டு மந்திரத்தை கூறுகிறேன் கேள், யார் அறிவார் இவரின் திருவிளையாட்டை ஆணவத்தை வென்றவர்கள் மட்டுமே அறிவர். இனி மந்திரத்தைக் கேள்,

“ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உக்கிரமாக ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்ஷர்களை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய ஹனுமந்தா வா வா சுவாஹா"

திருநீற்றைக் கையில் எடுத்து மேற்படி மந்திரத்தை மனதார ஐந்து தடவை ஓதி உனைச் சுற்றி தூவிக் கொண்டால் உன்னை எந்த வித எதிரிகளும் அண்ட மாட்டார்கள், யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது, செய்வினைகள் , பில்லி, சூனியம், பேய், பிசாசு எதுவும் கிட்டே நெருங்காது என்கிறார் அகத்தியர்.

இத்துடன் "பாவி தானாக்கால் யேது மேன்மை" என்றும் சொல்கிறார். பாவியாக இருந்தால் எது செய்தாலும் மேன்மை இல்லை என்கிறார் அகத்தியர்.

இதை செய்யும் முன் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லையேல் பலிக்காது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கோபமறு, குன்றாப் புகழுக்கு...

Author: தோழி / Labels: , ,

கோபம் எத்தனை பெரிய அறிவாளியையும் முட்டாளாக்கிவிடுகிறது. எவ்வளவோ சிறப்புள்ளவரையும் சீரழியச் செய்துவிடுகிறது, கோபம் கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். தன்னையே மறக்கச் செய்துவிடும். கோபத்தால், மதியையும், மானத்தையும், நிம்மதியையும் இழக்க நேரிடும்.

கோபம் ஏற்படுத்தும் விளைவுகளை, பாதிப்புக்களை நாம் அறிய முற்படுவதில்லை. எது கோபத்தை தூண்டியது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதெல்லாம் பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை.

ஆனால், சித்தர்கள் கோபத்திற்கு மூலமான மாயையை அகற்றி விடுகிறார்கள், மாயை இல்லாத இடத்தில் , ஆசை, கோபம் இருப்பதில்லை, தங்கள் மனதை அடக்கியதால் தான் சித்தர்களுக்கு யோகம் சித்தியானது. முத்தி நிலை வாய்த்தது.

இதையே,

"மனமானது அடங்கியே போச்சு இந்த
மாயையை விட்டுக் கரையேறலாச்சு
சினமென்னும் கோபம் அறுந்தாச்சு யோகம்
சித்தியாகவே முத்தியும் ஆச்சு."


என்று பாடுகிறார் கல்லுளிச் சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனித வாழ்க்கை கானல் நீர் போன்றது...

Author: தோழி / Labels: , ,

பாலை மணலில் ஓடும் மான் கானல் நீரை, நீரென எண்ணி ஓடுவதைப் போல, மாந்தர்கள் பூவுலக வாழ்க்கையை நிஜம் என்று நம்பி மகிழ்ச்சியில் மூழ்குகிறார்கள். ஆனால் புலன்களை வென்று மனதை மேல் நிலைக்கு கொண்டு சென்றவர்கள் இந்த இந்தப் பூவுலக வாழ்க்கையில் மயங்குவதில்லை. அவர்கள் மெய்ப் பொருளை மட்டுமே நம்புவார்கள். கானல் நீரை நிஜம் என்று நம்பும் மான் ஓடிக் கொண்டே தான் இருக்கும் கானல் நீரும் தள்ளி தள்ளி போய்க் கொண்டே இருக்கும். முடிவில் நீர் கிடைக்காத மான் களைத்து விழும்.

மனித வாழ்க்கையும் கானல் நீரை நம்பி ஓடும் மான் போல ஆகிவிடுகிறது, மெய் பொருள் என்ன என்று அறியாமலே அவர்கள் வாழ்க்கையும் முடிந்து விடுகிறது . இந்தக் கருத்தினை மிக எளிய வார்த்தைகளில் அருமையாக எடுத்துக் காட்டுகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இதோ அவர் பாடல்..

"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!"

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இறைவன் பெயரில் நடக்கும் உயிர்ப் பலியைக் கண்டிக்கும் சித்தர்கள்...

Author: தோழி / Labels: , ,

தங்கள் உடம்பில் நோய்நொடி துன்பம் ஏற்பட்டதும் நேத்திக்கடன் என்ற பெயரில் ஆடு கோழிகளை பிடாரி கோவிலில் பலி கொடுப்பதைக் கண்ட சிவவாக்கியார், நீங்கள் எந்தத் தெய்வம் அருள் செய்யும் என்று பலி கொடுக்கிண்றீர்களோ அந்தத் தெய்வமே உங்களை, உங்கள் வாழ்வை உருக்குலைய செய்து , உங்களைத் தேய்வடையச் செய்து , உங்களை மூஞ்சூறு போல் ஆக்கும் என்று,

"தங்கள் தேகம் நோய்பெறின் தனைப்பி டாரி கோவிலில்
பொங்கல் வைத்து ஆடுகோழி பூசைப் பலியை இட்டிட
நாங்கச் சொல்லும் நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூறாய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்கு லைப்ப துண்மையே!"


இறைவன் பெயரில் நடக்கும் பலியைக் கண்டிக்கிறார் சிவவாக்கியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கருவூரார் சொன்ன தேவ வசியம்...

Author: தோழி / Labels: , , , ,

"பாரப்பா நாக மல்லி மூலம் வாங்க
பாடுகிறேன் மந்திரந்தான் பண்பாய்மக்காள்
செய செய ஓம் கிலியும் பகவதா
வென்று தியானம் செய்து ஆரப்பா பிடுங்கி
வந்து நிழலு லர்த்தி அப்பனே பொடியாக்கி
திரியி லூட்டி பெறப்ப காராவின் நெய் யெரித்து
மையைப் போட்டிடவே தேவரெல்லாம் வசியமாவார்".


- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-


பண்பான மாணவர்களே நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கருவூரார் சொன்ன மிருக வசியம்...

Author: தோழி / Labels: , , ,

"பாரப்பா வேண் குன்றி மூலம் வாங்க
நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசி வசி
நிறை மிருக வசீகரி ஓமென்று போற்றி
வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்".


- கருவூரார் பலதிரட்டு -

விளக்கம் :-


வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் சொல்லும் சத்துரு வசியம் செய்யும் முறை...

Author: தோழி / Labels: , , ,

"தானான புலஸ்தியனே தருமவானே
தயாநி தியே சங்கநிதி சார்பேகேண்மா
கோணான வானை யேன்னு மூலிசாபம்
கொடுஞ் சுருக்கு பிரனவங்களே தென்றாக் கால்
மானானவட் சரமாம் றீங்ரீ யுமாகும்
மகத் தானவுரு வதுதான் லட்சமோது
பானான படை மன்னர் கோடி பாகம்
பாலகனே தலைவணங்கு மூலிதானே".


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

தருமவானே, தயாநிதியே, சங்கநிதியே, புலச்தியனே என் சீடனே கேள், கோணான வானை எனும் மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் "றீங்ரீ" என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எதற்காக மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்ய வேண்டும்...

Author: தோழி / Labels: ,

மனிதர்கள் உட்பட மற்ற ஜீவராசிகளுக்கு உள்ளது போல தாவர வர்க்கமாகிய மூலிகைகளுக்கும் உயிர் உண்டு. சாதாரணமாக நாம் அவற்றைப் பிடுங்கும் பொது அதன் உயிரானது பிரிந்து அது இறந்து விடும்.

பொதுவாக உயிரற்ற ஜடத்தால் எதுவும் செய்யமுடியாதல்லவா? உயிர் இருந்தால் தானே செயல்படமுடியும்.

ஆகவே,

மூலிகைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமாயின் அதன் உயிரை உடலிலே இருக்க செய்து பிடுங்க வேண்டியது அவசியமாகிறது.

மூலிகைகளின் சாப நிவர்த்தி செய்து பிடுங்கும் போது அதன் உயிர் உடலிலேயே தங்கி விடும். அப்போது அதன் செயற்பாடு சரிவர நடக்கும் அதனால் சாப நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

இப்படி சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கும் மூலிகைகள் எதற்கும் பயன்தரா.

சாப நிவர்த்தி செய்யப் பட்ட மூலிகைகளே மருத்துவத்திற்கும் பயன்படும், ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் போது சாப நிவர்த்தி வேறு விதமாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...

Author: தோழி / Labels: , , ,

"ஒப்பான இன்னொரு முறைமை கூர்வேன்
ஓகோகோ நாதர்கள் மறைத்த செதி
செப்பவே விஷ்ணு வாங்க சாபம்
செம்மையுடன் மாணாக்க ளறிய வேண்டி
தப்பாது பிரணவ ங்களே தேன்றாக்கால்
தயாபரனே சிம் சிம் சிம் மென்றேயோது
எப்படியும் லட்ச முரு செபித் தாயானால்
ஏன் மகனேலோ கசித்த னாகுவாயே".


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

இன்னுமொரு முறை சொல்கிறேன் கேள், பெரிய பெரிய சித்தர்கள் எல்லாம் மறைத்த செய்தி உனக்காக சொல்கிறேன் விஷ்ணு வாங்க செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...

Author: தோழி / Labels: , , ,

"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்
அப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி
வகுடனே சாபமத்தை நீக்குவதற்கு
வளம் பெரிய பிரணவமே தேன்றாக்கால்
சாகுயடைய வட்சரமாம் தூ தூ வாகும்
சதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்
நாகுடனே லட்சமுருவோ துவோது
நாயக னேநாடெல்லாம் வைசியந் தானே"


- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :-

புலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் சொன்ன வசியங்கள்...

Author: தோழி / Labels: ,

மேன்மை பொருந்திய சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக, யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக் காவியங்களை இயற்றித்தந்துள்ளனர்.

அந்த மாந்திரீக காவியத்தில் அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
அவையாவன,

1. வசியம் :-
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

2. மோகனம் :-
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

3. ஸ்தம்பம் :-

இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

4. உச்சாடனம் :-
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

5. ஆக்ருஷணம் :-
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

6. பேதனம் :-
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

7. வித்வேஷணம் :-
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

8. மாரணம் :-

இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.


இதிலே நாங்கள் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப் பிரித்துள்ளனர். அது,
1.ஜன வசியம்.
2.ராஜ வசியம்.
3.புருஷ வசியம்.
4.ஸ்திரீ வசியம்.
5.மிருக வசியம்.
6.தேவ வசியம்.
7.சத்துரு வசியம்.
8.லோக வசியம்...ஆகியவை.

இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ, பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.

அது மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது. அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே...

வசியக் கலையை நமது நல்வழிக்காகவும், நாம் செல்லும் நல்வழிக்கு தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தி, நாமும் வாழ்ந்து, மற்றவரையும் வாழ விடுவோம்.

அவர்கள் சொன்ன வசிய மூலிகைகள் என்ன அவற்றை எவ்வாறு எடுப்பது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்...

Author: தோழி / Labels: , ,

மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்...

"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே."


இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார்.

பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான வார்த்தைகள், ஓசையோடு அமைந்த நடை இவை அனைத்தும் பட்டினத்தார் பாடல்களின் தனிச் சிறப்பாகும்.

அவர் சொல்லியுள்ள அருமையான சித்தாந்தக் கருத்துக்கள் ஊன்றிப் படிப்பவர்களுக்கு சிறந்த ஆன்மீக வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத் தூய்மை...

Author: தோழி / Labels: ,

நம்முடைய பாவ மூட்டைகளைக் கரைக்க புனித தீர்த்தங்களில் நீராடி வருவோம, புண்ணிய ஷேத்திரங்கள் சென்று தரிசனம் பண்ணுவோம்.

பாகற்காயை எந்த நதியில் கழுவி எடுத்தாலும், அதன் சுவை மாறது, என்பது போலவே நம்முடைய இயல்பும் அப்படித்தான். நம் உள்ளம் தூய்மை அடையாமல் எங்கு சென்று எது செய்தாலும் பலன் தரப் போவதில்லை.

உள்ளம் மாசற்றதாயின் இறைவன் அங்கே விரும்பி வந்து வீற்றிருப்பான்.

சித்தர்கள் சொல்லுவதும் உளத்தூய்மையையே,

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு".


என்று வள்ளுவர் உரைத்ததும்...

"மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டா"


என்று அகத்தியர் உரைத்ததும்...

"சித்தத் தலம் போல தெய்வம் இருக்கின்ற
சுத்தத் தலங்களுண்டோ? குதம்பாய்
சுத்தத் தலங்களுண்டோ?"


என்று குதம்பைச் சித்தர் உரைத்ததும் அகத் தூய்மையைத்தானே..?

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...

Author: தோழி / Labels: , ,
பொதுவாகவே வேப்ப மரத்தின் அரும் பெரும் குணங்கள் தற்போது பலருக்கு தெரியாது. அப்படித் தெரிந்தாலும் அது அம்மரத்தைப் பற்றிய பொதுவான குணமாகவே இருக்கும்.

வேம்பைப் பற்றி அகத்தியர் இயற்றிய நூல்களில் தத்துவம் முன்னூறு என்ற நூலில் மூன்றாவது ஞானகாண்டத்தில் வேம்பின் பெருமையை மிக அழகாகக் கூறுகிறார்.

“பாரப்பா வேம்பினூட பிறப்பைக் கேளு
பணியனையன் பாலாழி யமுர்தம் தனை
நேரப்பா பெண்ணுருவாய் தேவர்க்குப் படைத்தார்
நிகரில்லா ராட்சதர்கள் பெண்ணைப் பார்த்து
சாரப்பா மயங்கி நின்ற ரசுரர்ககளி லொருவன்
தானவர்கள் பந்தியிலே வந் திருந்த தாலே
சேரப்பா தேவருடன் கலந்திருந்த தாலே
திருமாலு மூன்றகப்பை படைத்தான் கேளே.”

விளக்கம் :-

வேம்பின் பிறப்பைப் பற்றிக் கூறுகிறேன் கேளு, திருமால் பெண்ணுருவம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு அகப்பையினால் பங்கிடும் போது, அசுரர்கள் அந்தப் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி இருக்கையில், அசுரர்களில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் தேவர்கள் பந்தியில் வந்து அமர்ந்துவிட, திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கும் மூன்றகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார்.

“படைத்திட்ட பெருமாலாம் பெண்ணி னோடு
பருதி மதி யசுரனவ ரென்ற போது
உடைத்திட்ட அசுரனவன் னமுர்த முண்ண
ஓரடியா யாகப்பையினால் வெட்டினார் மால்
படைத்திட்ட யிரண்டாகி ரவி மதிக்கு
பகையாகி ராகுகே துக்களேன்றே சர்ப்பமானார்
அடைத்திட்ட அகப்பையினால் வெட்டும் போது
அவன்வா யாலமுர்த்த மாதைக் கக்கி னானே.


விளக்கம் :-

அமிர்தத்தை கொடுத்த திருமாலுக்கு அருகிலிருந்த சூரியனும், சந்திரனும், அவன் அசுரன் என்று ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டு இருந்த அசுரனை நோக்கித் திருமால் அகப்பையால் வெட்டி விட, அசுரன் தலை வேறு உடல் வேறாக வெட்டப்பட்டு, அடையாளம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களுக்கு பகைக் கிரகமான ராகு, கேது என மாறினார்கள்.

அகப்பையினால் வெட்டுப்படும் போது அசுரன் தனது வாயில் மீதமாக இருந்த அமிர்தத்தைக் கக்கினான்.

“கக்கும்போ தமூர் தமது லிங்கம், போலக்
காசினியில் விழுந்ததுவே வேம்பு மாச்சு
முக்கியமாய்க் கசப்பு வந்த தேதென்றாகால்
முனையசுரன் வாயில் நின்று வீழ்ந்ததாலே
சக்கியமாய் வேம்பு தின்றால் சாவோ யில்லை
சனகாதி நால்வருடன் யானுந் தின்று
அக்கண மேசித்திபெற் றவேம்பு நேர்மை
ஆரறிவா ருலகத்தோ ரறியார் காணே.”


விளக்கம் :-

கக்கும்போது அசுரனின் வாயிலிருந்து பூமியில் விழுந்த அமிர்தமானது வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச்சுவை வந்த காரணம் என்ன வென்றால், அசுரனின் (பாம்பின்) நச்சு வாயிலிருந்து வெளிப்பட்டதால் தான். அப்படிப் பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு சாவு என்பதே கிடையாது. இப்படிதான் சனகாதி நால்வருடன் ( என் குருமார்கள் நால்வருடன்) சேர்ந்து நானும் சாப்பிட்டு காயசித்தி பெற்றேன். இப்படிப்பட்ட வேம்பின் பெருமையை இந்த உலகத்தில் யார் அறிவார் என்று மிகதெளிவாக வேம்பின் பெருமையை அகத்தியர் தெளிவுபடக் கூறுகிறார்.

காயசித்தி :- காயம் என்றால் உடம்பு சித்தி என்றால் சித்திக்கும், ஆகவே, அழிவில்லா உடல் சித்திக்கும் என்று பொருள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சூக்கும சரீரம்…

Author: தோழி / Labels: , ,

இது உள்ளுடம்பு. இதைக்கொண்டு யாவற்றையும் உணர்ந்து கொள்ளலாம். தொலைவில் நிகழ்வதைப் பார்க்கலாம், கேட்கலாம். அப்படிப் பார்ப்பதும் கேட்பதும் புறத்தே உள்ள கண்களாலோ கதுகளாலோ அல்ல, சூக்குமமான அந்தக்கரண அறிவால், அவை அனுபவம் ஆகும்.

சூக்கும சரீரம் ஒளி பொருந்தியது, இந்த ஒளி தூய எண்ணம், தூய சொல், தூய செயல், இவற்றால் வருவதேயாகும். அது அறிவினால் சிறப்புப் பெற்றவர்களிடம் பொன்னிற ஒளியாகவும், பண்பால் சிறப்பு பெற்றவர்களிடம் வெண்ணிற ஒளியாகவும் விளங்குமாம்.

மூலாதாரத்தின் முக்கனலில் உருவாகிறது சூக்கும உடம்பு.

சித்தர்கள் சூக்கும தேகத்தை தூல தேகத்திலிருந்து பிரித்துக் கொண்டு விரும்பிய இடத்திற்குச் சென்று வந்து மீண்டும் தூல தேகத்துடன் பொருத்திக் கொள்வராம்.

இந்த சூக்கும தேகமானது தூல தேகத்தை பிரிந்தால் தூல தேகம் இயக்கமற்று நின்று விடும். இப்படி சூக்கும தேகம் பிரிதலே மரணம் எனப்படும்.

இந்த தூல தேகத்திலிருந்து பிரிந்த சூக்கும தேகத்தை , சூக்குமதேகத்திலிருந்து பிரிந்த வேறொரு தூல தேகத்தில் போருத்துவதையே கூடு விட்டு கூடு பாய்தல் என்பர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சரீரங்கள்...

Author: தோழி / Labels: , ,

உயிரைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது உடம்பு. இந்த உடலை தூல சரீரம் என்று அழைப்பர். உள்ளுடம்பை சூக்கும சரீரம் என்று அழைப்பர்.


தூல சரீரம்..

உடம்பின் பயன் அறிவை உண்டு பண்ணுவது. இந்த உடம்பு பலவிதமான உணர்ச்சிகளைப் பெற்று மகிழ்கிறது. இவற்றில் எதுஅழியும் உணர்வு, எது அழியா உணர்வு என்பதைப் பகுப்பாய்வு செய்து அழியா உணர்வை அறிவதே அறிவுடையோர் செய்கின்ற கடமை ஆகும்.

பொதுவாக மனிதர்களை மூன்று வகையாக சித்தர்கள் சொல்வார்கள் அவையாவன,

சகலர் :- உடலறிவை மட்டும் பெற்றவர் சகலர் என்றும்,

பிரளயாகலர் :-
உயிர் வாழும் பொது தேவர்களை எண்ணி வாழ்ந்து விட்டு, உயிரிழந்த பிறகு அந்நிலையைப் பெறுபவர்கள் பிரளயாகலர் என்றும்,

விஞ்ஞானகலர் :- உடல் உள்ளபோதே தேகத்தைப் பற்றி அறிந்து சூக்கும தேகத்தை வசப்படுத்தி அதில் முளுநினைவுடன் செயல்ப்படும் ஆற்றல் கைவரப் பெற்று தேகத்தை விட்டு வாழும் வல்லமை பெற்றவர்களே விஞ்ஞானகலர் என்றும் சித்தர்கள் அழைப்பர்.

இந்த உடம்பு ( தூல சரீரம் ) உணவினால் உருவாக்கப் பட்டது, உணவால் பிழைத்திருக்கிறது, இந்த உடம்புக்கென்று உறுதியான குணமும் இல்லை அறிவும் இல்லை, நிலையற்ற இந்த உடலையே "நான்" என்று பலரும் அறியாமையால் கருதிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உண்மையிலேயே நிலையானது சூக்கும சரீரமே..

அந்த சூக்கும சரீரம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குண்டலினி சக்தி…

Author: தோழி / Labels: ,குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி எளிதில் அது வெளியேறாதபடி பாதுகாக்கும் இடம். குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற சக்தி குண்டலினி ஆயிற்று.

மனித சரிரத்தைத் தாங்கி நிப்பது குண்டலினி சக்தியே, இது பாம்பு போல் வளைந்து சுருண்டு சரீரத்தினுள் எருவாய்க்கும், கருவாய்க்கும் இடையில் உள்ளது. இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர்.

குண்டலினி சக்தியை விழிக்கச் செய்தே சித்தர்கள் அட்டமா சித்தியைப் பெற்றனர். யோகப் பயிற்ச்சிகள் செய்து இந்தக் குண்டலினி சக்தியை விழிக்கச் செய்வதன் மூலம் யோகியர் இறையனு பவங்களைப் பெறுகிறார்கள். தெய்வீக இரகசியங்களை அறிகிறார்கள்.

குண்டலினி சக்தி உடம்பில் சக்தி அம்சமாக உள்ளது. உச்சந்தலையில் சிவா அம்சம் உள்ளது. குண்டலினி
சக்தி சிவத்தைச் சேரும் இன்பமே பேரின்பம் இந்த அனுபவத்தை சித்தர்கள் நிறையவே தங்கள் பாடல்களில் பதிந்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை வாய்த்ததுக்குக் காரணமே இந்தக் குண்டலினி சக்தியின் ஆற்றலால் தான்.

யோகிகளும், சித்தர்களும் இந்த சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றுகிறார்கள். அவர்களால் அளவற்ற அற்புதங்களை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது காத்தது எப்படி?

Author: தோழி / Labels: ,

குண்டலினி யோகத்தில் சுழுமுனை நாடி வழியே மூலக் கனலை மேல் நோக்கிச் செலுத்துகிற யோகிக்கு மும் மண்டலங்களும் ஒத்த வகையில் வளரும். அது வளர்ந்தபின் எடுத்த உடல் உலகம் இருக்கும் வரை சீவனை விட்டு நீங்காது என்கிறார் திருமூலர்.

"கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே."


என்பது திருமந்திரம்,

முக்குணம் என்கின்ற இருள் நீங்க மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேலெழுப்பி, வலப் பக்கத்து சூரிய கலையை இடப்பக்கத்து சந்திர கலையுடன் பொருத்தி காலையில் ஒரு நாளிகை நேரம் பயின்றால் உடம்பில் உயிர் அழியாது இருக்க வைப்பன் சிவன், என்கிறார் திருமூலர்.

மும்மண்டலம் :- அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்.

முக்குணம் :- தாமசம், இராஜசம், சாத்வீகம்.

ஆகவே சித்தர்கள் பல வருடங்கள் உயிர் வாழ்ந்தது இப்படித் தான் என்பது திருமூலர் வாக்கிலிருந்தே தெளிவாகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நீங்களும் மரணம் இல்லாமல் வாழலாம்...

Author: தோழி / Labels: , ,

"மூல நாடி முகட்டறை உச்சியில்
நலுவாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வாசல் கனவிலும் இல்லையே."

- திருமூலர் -

மூல நாடி என்றால் சுழுமுனை. இது எழுபத்து ஈராயிரம் நாடிகளுக்கும் தலயாயது. இதன் முகட்டில் உள்ள அறை கபால உச்சியில் இருக்கும். அங்கே நான்கு அறிவுகளின் வாசல்கள் உண்டு. அவற்றின் நடுவாக அமைந்த மையத்தில் மனம் ஒன்றி நிக்குமாயின் சச்சிதானந்தப் பெருவேளியைக்க் காணலாம். அதைக் கண்ட பின்பு இயமன் என்கின்ற பயம் இல்லவே இல்லை, அதாவது இறப்பே இல்லை என்கிறார் திருமூலர்.

நான்கு அறிவுகள் :- கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தூய ரசமணியை இனங்காண்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"கனிவாக பசுமாடு கறக்கும் போது
மாநேன்ற முதுகுதனில் வைத்திட் டாக்கால்
மயமாகப்பா லுந்தான் கறக்கா வாறே"


என்ற பாடலில்,
பசுமாட்டில் பால் கறகும் போது அதன் முதுகின் மேல் இரசமணியை வைத்தால் பால் கறப்பது நின்றுவிடும். மீண்டும் மணியை எடுத்தல் தான் மேலே கறக்கும்.

இவ்வாறு தான் தூய இரசமணியை அறியலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசமணி கட்டும் எளிய முறைகள்...

Author: தோழி / Labels: ,

”பாரப்பா சூதங்கட்ட
பட்சமா யொன்று கேளு
வீரப்ப தாளிச் சாறு
விட்டுணு கிரந்தி சாறு
சேரப்பா ஒன்றாய்க் கூட்டி
சுரிங்கிடச் சூதம் கட்டும்
ஆரப்பா சொல்லப் போறா
ரடையலாம் சித்தி பாரே”


கருவூரார் சொல்லும் வழி இது…

பொருள் :-
சூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும்.


“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு
முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு
காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்
ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்”


போகர் சொல்லும் வழி இது…

பொருள் :-
சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.


“காணும் சுத்தம் செய்த சூதம்
கட்டவே நீகேளடா
பூணு மஞ்ச ணாதிலை
பிழிந்த சாறு சுருக்கிட
வேணு மிரண்டு நாழிகையில்
மெழுகு போலுருண்டிடும்”


பொருள் :-
சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.

இவையே ரச மணி கட்டும் இலகுவான வழிகளாகும்.


இந்த இரசமணி பற்றி சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான விடையம் என்ன வென்றால், பொதுவாக இரசமணி என்று சில போலி மணிகள் விற்பனையில் உள்ளதால் தூய ரசமணியைக் கண்டறிவது எப்படி? இதையும் சித்தர்கள் சொல்லியே சென்றுள்ளனர்.

எப்படித் தூய இரசமணியை க் கண்டறிவது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாதரசத்தை சுத்தி செய்யும் முறைகள்…

Author: தோழி / Labels: , ,


"ஆகாத கன்மச மகற்ற முறை(மை) கேளு
வாகான கல்லுப்பு மாட்டு சமபாகன்
தாகான குமரிப்பூ சாறொரு மூன்று நாள்
பாகாய்க் கழுவிப் பதனமாய் வாங்கிட "


இப்பாடலின் பொருள்:-
இரசத்திலுள்ள சகடுகள் அகற்ற ஒரு முறையைக் கேளு, கல்லுப்பை இரசத்திற்கு இணையாக எடுத்துக் கொண்டு. குமரிச் சாற்றை சேர்த்து மூன்றுநாள் அரைத்துக் கழுவி எடுத்துக் கொள்.

என்ற பாடல் மூலம் திருமூலர் இரசத்தில் உள்ள குற்றங்கள் தோஷங்கள் அகற்ற மிக இலகுவான வழியைக் கூறியுள்ளார்.

இதே போல் கொங்கணவரும் மிக இலகுவான வழி ஒன்றைச் சொல்லி இருக்கிறார்,

"உப்பது பலமும் நாலு
உயர்ந்தி டும்சூதம் எட்டு
கப்பதுக் கல்வத் திட்டுக்
கலந்து வார்குமரிச் சாறு
செப்பது யரைப்பா யப்பா
சிறந்துடன் மூன்று நாள் தான்
அப்புய கஞ்ச தோஷம்
ஆறொன் றும்போகும் பாரே"


இம்முறையும் எளிமையானதே.

இப்பாடலின் பொருள்:-
உப்பை நான்கு பலம் எடுத்து கல்வத்திலிட்டு அதில் எட்டு பலம் சூதத்தைவிட்டு, அதில் குமரி சாற்றை வார்த்து மூன்றுநாள் அரைக்க ஏழுவித தோஷமும் போய் விடும் பாரு.

இனி, இவ்வாறு சுத்தி செய்யப் பட்ட பாத ரசத்தைக் கொண்டு இரசமணி கட்டுவது எப்படி?

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாத ரசத்தின் தோஷமும், குற்றமும் சுத்தி செய்யாவிட்டால் என்னாகும்.?

Author: தோழி / Labels: , , ,

திருமூலர் தனது நூலில்,

"ஏதுவாய் நின்ற எழிலான சூதத்தில்
கோதுவாய் நின்ற குடிலமய லேளுமே
கோதுவாய்ப் போக்காட்டால்கே வனமேடுக் காது
வாதுவாம் வாதத்துக் காகாதே"


என்ற பாடலில்,

சூதத்தில் அதன் குணங்களைக் கெடுக்கக் கூடிய மலமாகிய ஏழுவித குற்றத்தை போக்காவிட்டால் ககன மேடுக்காது வாதத்துக் காகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாதரசத்தில் உள்ள தோஷமும் குற்றமும்...

Author: தோழி / Labels: , ,

பாதரசத்திற்கு எட்டு வகையான தோஷமும் ஏழு வகையான சட்டையும் உண்டு என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

“உண்டீனங் கெளடில்யம் ஓதும நவர்த்தம்
சண்டத்வம் பங்கோடு சங்காரம் - விண்ட
பளுசாற்ச மலத்வம் பன்னுசவி ஷத்வம்
விளுமெண் ரசதோடம் வேறு.”


என்ற பாடலில், உண்டீனம், கெளடில்யம், அனவர்த்தம், சங்கரம், சண்டத்துவம், பங்குத்வம், சமலத்வம், சபிஷத்வம் என்ற எட்டு விதமான தோஷம் உண்டு என்று விளங்கப் படுத்தப்பட்டுள்ளது.

இதே போல இரசத்தில் எழு சட்டைகள் உள்ளதாக சொல்லப் படுகிறது, இந்த எழு சட்டைகள் என்று சித்தர்களால் சொல்லபடுவது இரசத்தில் கலந்துள்ள மாசுக்களான தாதுப் பொருட்களையே, அந்த எழு சட்டைகளையும் சித்தர்கள் வரிசைப் படுத்தியுள்ளனர் அவையாவன,
நாகம், வங்கம், அக்கினி, மலம், விடம், கிரி, சபலம் ஆகியவையே ஆகும்.

ஆகவே இந்த பாத ரசத்தை எடுத்ததும் பயன்படுத்தமுடியாது என்பது தெளிவாகிறது அப்படி பயன்படுத்த வேண்டுமாயின் அதை சுத்தி செய்து கொள்வது எப்படி? சுத்தி செய்வது என்றால் அதன் தோஷத்தையும், குற்றத்தையும் நீக்கிக் கொள்வதை சுத்தி செய்வது என்று அழைப்பர்.

இரசத்தை சுத்தி செய்ய சித்தர்கள் சொன்ன இலகு வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...

Author: தோழி / Labels: ,


இரசம் :-
இது சுத்தமான இரசத்தைக் குறிப்பதாகும், இலேசான சென்நிறமுடையது. குற்றமில்லாதது.

ரசேந்திரன் :-
இது சற்று கருமை நிறம் படர்ந்தது. இதுவும் குற்றமில்லாதது.

பாரதம் :- இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது இது குற்றமுள்ளது, இதன் குற்றத்தை சுத்தி செய்தால் மட்டுமே ரசமணி கட்டப் பயன்படும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.

சூதம் :- இது சிறியளவு வெளிர் மஞ்சள் நிறமுடையது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும்.

மிசரகம் :- இது சற்று தாழ்ந்த நிலையில் உள்ளது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.

அது என்ன தோஷமும் , குற்றமும்? அதை எங்களால் நீக்கி ரசமணிகட்ட முடியுமா? அதை இலகுவாக நீக்க முடியுமா?... முடியும் சித்தர்கள் இலகுவான வழிகளை சொல்லி இருக்கிறார்கள்.

அதை விளக்கமாக அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரசம் பற்றி....

Author: தோழி / Labels: , ,


"காரமே சூதம்புண்யம் கற்பமாஞ் சாமஞ் சத்து
சூரியப கையாஞ் சாதிரு த்திரன் துள்ளியீசன்
வீரிய ஞ்சூழ்ச்சிநீராம் விண்ணீர் விண்ம ருந்து
சீர்பெறு மிரத மென்று செப்பி னார்ரொப் பிப்லோரே"


என்ற பாடலில் பாதரசத்திற்கு சித்தர்கள் சூட்டியுள மறை குறியீட்டு பேர்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

அவையாவன காரம் , சூதம், புண்ணியம், கற்பம், சாமம், விண்ணீர், வின்மருந்து , இரசம், என்று சொல்லப்பட்டுள்ளது.

இது போன்று பல சித்தர்கள் பாதரசத்தை புகழ்ந்துள்ளனர், அதில் முக்கியமானதாக நாம் எடுத்துக் கொள்வதாயின் மகா சித்தராகிய போகர் தனது சப்தகாண்டம் என்ற நூலில் பாதரசத்தை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்.. அது...

“ஆறியே சூதமஃ தை ந்துவித மாகும்
அதன் விபர மேதென்னி லறையக் கேளு
ஊறியே ரசமென்றும் இரசேந் திரமென்றும்
உற்றபா ரசமென்றுஞ் சூதமென்றும்
மீறியே மிசர கமென் றைந்து மாச்சு"


சூதம் ஐந்து வகையாச்சு அதன் விபரம் சொல்கிறேன் கேளு, இரசம் என்றும் , ரசேந்திரன் என்றும், பாரதம் என்றும், சூதம் என்றும், மிசரகம் என்றும் ஐந்து வகையாச்சு என்று சொல்கிறார். போகர் இவ்வாறு ஐந்து வகையாக பிரிப்பதற்குக் காரணம் அதன் தன்மைகளை கொண்டே.

இந்த ஐந்து ரசவகைகளின் தன்மைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


“இரசமணி” என்றால் என்ன? அதன் பயன் என்ன?.

Author: தோழி / Labels: , ,

பாதரசம்....

திடமற்ற திரவ நிலை உலோகமான இது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய தாதுப் போருட்களில் ஒன்று. நீர்ச்சத்தும், காற்றும் ஒருங்கே அமையப் பெற்றது இந்தப் பாதரசம்.

பொதுவாக வெண்மை நிறத்துடன் கூடிய பாதரசத்தை நாம் பார்த்திருக்கிறோம். அனால் அதே போன்று சிகப்பு, மஞ்சள், வெளிர் நீலம் என பலவித நிறங்களிலும் உண்டு. ஆனால் இவை அபூர்வமாக கிடைப்பவை. இத்தகைய பாத ரசம் வாத வைத்தியத்தின் கூற்றுப்படி பாஷாண வகைகளில் ஒன்றாக சொல்லப் படுகிறது. பாஷாணப் பண்புகளை உள்ளடக்கி உள்ளதால் இதற்கு "சூதம்" என்று ஒரு பெயரும் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.

வைத்தியத்திற்கு இரச பதங்கம், இரச பட்பம், இரச செந்தூரம் என்று பலவழிகளில் பயன்படும் இந்தப் பாதரசத்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என்று அழைக்கப்படும். இந்த இரசமணியை உடலில் அணிந்து கொண்டோமானால், அதனால் நாங்கள் அடையும் பலன்கள் அதிகம். பாதரசத்தை மணியாக மாற்றுவது ரசவாதக் கலையின் ஒரு பகுதியே ஆகும். இதில் இருக்கும் நீரையும் காற்றையும் பிரித்தெடுப்பது தான் மிக இரகசியமாக கையாளப்படுவதுடன், மிக இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.

இந்த இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் இவைசம்பந்தப்பட்ட எந்த நோயும் உடலைத்தாக்காது பாதுகாக்கும்.

இந்த இரசமணிக்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால், நாம் எந்த சத்தை அதற்க்குக் கொடுக்கிறோமோ அதை உள்ளுக்கு இழுத்து பயன் தரும், இதனாலேயே யோக நிலைக்கு சென்று ஞானத்தை அடைய விரும்புபவர்கள், அதைப்பயன்படுத்தி ஞான நிலையை அடைந்தார்கள்.

இவ்வாறு பல அரிய பண்புகளை உள்ளடக்கிய பாதரசத்தை எவ்வாறு மணியாகக் கட்டி பயன்படுத்துகிறோமோ அவ்வாறே அது நமக்கு பலன் அளிக்கும். இதனைக் கட்டும் வழிமுறைகளை நமது சித்தர்கள் பலவாறாக கூறியுள்ளனர். இலகுவான முறை தொடக்கம் மிகவும் கடினமான முறை வரை அவரவர் தங்கள் குரு உபதேசித்ததை , தாங்கள் செய்து அனுபவம் அடைந்ததை அப்படியே ஒளிவு மறைவின்றி மக்கள் அறிந்து பயன் அடையும் விதமாக சொல்லித்தந்துள்ளனர்.

இவ்வளவு பயன்களைக் கொண்ட இந்த இரசமணியைக் கட்டுவது (தயாரிப்பது) எப்படி?

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


"இது கொடிமரத்திற்கு ஏற்றது"

Author: தோழி / Labels: ,
வடலூரில் ஞான ஆலயம் ஒன்று எழுப்ப திருவுளம் கொண்டார் இராமலிங்க சுவாமிகள். சத்திய ஞான சபைக்கு கொடிமரம் தேவைப்பட்டது. ஆலயப் பணிகளைக் கவனித்துவந்த அன்பர்கள் சிலரை அழைத்து சென்னை சென்று மரம் வேண்டிவருமாறு பணித்தார். அவர்கள் இரயிலில் சென்னை சென்று இராமலிங்க சுவாமிகள் சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு முன் இராமலிங்க சுவாமிகள் தகுதியான மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் மீது நின்றபடி "இது கொடிமரத்திற்கு ஏற்றது"என்றாராம்.

அட்டமா சித்துக்களும் கைவரப் பெற்றவராகிற்றே அவர்.


இனி வரும் பதிவுகளில் சித்தர்கள் சொல்லிசென்ற முக்கியமானவைகளில் ஒன்றான "ரசமணி" பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தம்மைத் தூற்றினாலும் மக்கள் துயர் தீர்ப்பவர்கள்...

Author: தோழி / Labels: , ,
இடைக்காடர் மருத்துவ யோகா முறைகளில் சிறந்து விளங்கியது போலவே ஜோதிடத்திலும், வானியலிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

ஒரு சமயம் பெரும் பஞ்சம் வரப்போவதை முன் கூட்டியே அறிந்த அவர், ஊர் மக்களுக்கும் சொன்னார். அவர்களோ பித்தன் வாக்கு என்று அதை அலட்சியம் செய்ததால், பஞ்சம் வந்தபோது பட்டினியால் வாடினர். அவர்களின் கால்நடைகளும் உண்ண உணவின்றி இறந்தன. ஆனால், இடைக்காடரின் ஆடுகள் சாகவில்லை, ஏன் எனில் அவர் முன்கூட்டியே ஆடுகளுக்கு எருக்கிலை உண்ணப் பழக்கியிருந்தார். எந்த வறட்சியிலும் செழித்து வளரும் தன்மை எருக்கஞ் செடிகளுக்கு உண்டு.

இடைக்காடர் பஞ்சம் பற்றிய முன்னெச்சரிக்கையுடன் வீடு கட்டும் போது "குருவரகு" என்னும் தானியத்தை களிமண்ணோடு அதிக அளவில் கலந்து வீடுகட்டியிருந்தார்.

எருக்கிலை தின்ற ஆடுகளுக்கு உடல் அரிப்பு உண்டாகும். அப்படி உண்டான உடல் அரிப்பைப் போக்கிக் கொள்ள வீட்டுச் சுவர்களில் உராய்ந்து கொண்டன. அப்போது களிமண்ணோடு கலந்திருந்த தானியங்கள் பொல பொலவென உதிர்ந்தது அவற்றை சேகரித்த அவர் ஊர்மக்களுக்கு வழங்கி, ஊர்மக்களை பஞ்சப் பிணியிலிருந்து காப்பாற்றினார்.

தம்மைத் தூற்றினாலும் மக்கள் துயர் தீர்க்க முன்கூட்டியே எல்லாம் செய்து , சொல்லி வைப்பது சித்தர்கள் செயல் என்பது இந்த விசயத்திலிருந்தே தெளிவுபடுகின்றது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அடிக்கு ஒரு பொற்காசு...

Author: தோழி / Labels: , ,
கருவூரார் என்று அழைக்கப்படும் கருவூர்த்தேவர் ஒரு சமயம் நெல்வேலிக்குச் சென்று இருந்தார்.நெல்லையப்பரைத் தரிசிக்கும் ஆசையில் கோவிலுக்குச் சென்றார். அப்போது நிவேதன காலம், இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம் கிடைக்கவில்லை. "அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?" என்று இவர் நகைவுடன் கூறவும், கோவிலைச் சுற்றி ஏருக்கும், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்துக் கோவிலை மறைத்து நின்றன.

அங்கிருந்து திரும்பியும் பாராமல் நடந்தார் சித்தர், சித்தனின் கோவம் சிவனையும் நடுங்க வைத்தது. கருவூரார் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்தார். "அப்பனே இத்தனை கோவம் ஆகாது உனக்கு நீ என்னைக் காண வந்த போது நைவேத்திய நேரம். நான் உன்னுடைய குரலுக்கு செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று" என்று பக்குவமாய் சொன்னார். "சரி, போனது போகட்டும், திரும்பிவா திருநெல்வேலிக்கு" என்று இதமாக அழைத்தார்.

கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு வழங்கினார் இறைவன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்வினை தன்னைச்சுடும்...

Author: தோழி / Labels: , ,

பட்டினத்தார் துறவு நிலையில் வீடு வீடாக உணவு பெற்று உண்டது கண்டு அவரது உறவினர்கள் சினமடைன்தனர் தங்கள் குலப்பெருமை இவரால் சீரழிகிறதே என்று ஒருநாள் அந்த உறவினர்கள் அப்பம் ஒன்றில் நஞ்சு கலந்து, அதை உண்ணும்படி பட்டினத்தாரிடம் தந்தனர்,

உண்மையை உணர்ந்த பட்டினத்தார் அந்த அப்பத்தை உண்ணவில்லை,

"தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்"
என்றபடி, அப்பம் கொடுத்த உறவினர் வீட்டுக் கூரை மீது அதை எறிந்தார். உடனே அவர்கள் வீடு தீப்பற்றி எரிந்தது.

பட்டினத்தார் பெருமையை உலகம் அறியச்செய்த முதல் அற்புதம் இது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் செய்த அற்புதங்கள்…!

Author: தோழி / Labels: ,

சித்தாடும் சக்தி கொண்ட சித்தர்கள், சித்து வேலைகளையே தங்கள் குறிக்கோளாய் கொண்டிருக்க வில்லை. அவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாகவே அது இருந்தது, அவர்களின் சாதனைகளில் அது ஒரு சிறு பகுதி மட்டுமே.

சித்தர்கள் தங்கள் வல்லமையால் பொருட்களை உருவாக்கவும், வரவழைக்கவும் ( போலிகளின் மாயம் , மந்திரம் , தந்திரம் வேறு) செய்வார்கள். தாங்கள் எண்ணுகின்ற எதையும் அவர்களால் செய்ய முடிந்தது. உயிருள்ளவற்றையும் தமது சக்தியால் அவர்கள் வரவழைப்பார்கள். உயிரற்ற மனித உடலுக்கு உயிர் கொடுப்பார்கள், அவர்கள் ஒன்றை வேறொன்றாகவும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.

சித்தர்களுக்கு அவையெல்லாம் அற்ப சமாச்சாரங்கள், நமக்கோ அவையெல்லாம் அற்புதங்கள்.

அடுத்த அடுத்த பதிவுகளில் சித்தர்கள் செய்த சில சித்துக்கள் பற்றி பார்ப்போம்…

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இறைவனை வணங்குவதால் மட்டும்...

Author: தோழி / Labels: , ,

இறைவனை வணங்குவதால் மட்டும் பிறப்பைஅறுத்து விட முடியுமா? இறைவனைத் தேடி காடுகளில் அலைகிறவர்கள் இருக்கிறார்கள். உண்ணா நோன்பிருந்து, காற்றைமட்டுமே புசித்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். கோவண ஆண்டியாய் ஊர்சுற்றித் திரிபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களால் இறைவனை உணர்ந்துவிட முடியுமா? முடியாது என்கிறார் பட்டினத்தார். மெய்ஞானத்தை உணர்ந்தால் மட்டுமே பரம்பொருளோடு ஐக்கியமடைதல் சாத்தியம் என்கிறார் பட்டினத்தார்.

"காடேதிரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு விண்ணோர்
நாடே யிடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்
வீடே யிருப்பினும் மெய்ஞான வீட்டின்பம் மேவுவரே."

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிறந்தவர் இறக்காமல் இருக்க முடியும்...

Author: தோழி / Labels: , ,

உலக இன்பங்கள் அனைத்தும் சிற்றின்பம் என்றால், பேரின்பம் என்பது எது? சித்தர்கள் அதற்கும் பதில் சொல்கிறார்கள். ஆன்மா இறைவனோடு இரண்டறக் கலக்கும் இன்பமே பேரின்பம், இது முடிவில்லா இன்பம் என்கிறார்கள். இந்த பேரின்பம் கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலைமை வரவேண்டும் என்று பட்டினத்தார் சொல்கிறார்....

"பிறவாதிருக்க வரம் தரவேண்டும; பிறந்துவிட்டால்
இறவா திருக்க மருந்துண்டு காண் இது எப்படியோ
அறமார் புகழ்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவா திருமனமே! அதுகாண் நல் மருந்துனக்கே..!"


ஒரு முக்கியமான விஷயத்தை இந்தப் பாடலில் பட்டினத்தார் எடுத்துக்காட்டுகிறார். பிறந்து விட்டால் இறவாமல் இருக்க மருந்து உண்டு என்று சொல்கிறார். இதிலிருந்து சித்தர்கள் சூட்சும சரீரத்தில் இந்த அடிப்படையில் வாழ்கிறார்கள் என்பது தெளிவுபடப் புரிகிறதே....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி...

Author: தோழி / Labels: , ,

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.
இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்....

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை;
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம்விட்டே என் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ..??

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்…?

Author: தோழி / Labels: ,

சிவனையே சித்தராக எண்ணிய சித்தர்கள் சிவபெருமானுக்குரிய தோற்றத்தையே தாமும் புனைந்தனர். சிவபெருமானின் தோற்றத்தைக்கூறும் பரஞ்சோதி முனிவர் தலையில்கற்றைச்சடை, மார்பில் முப்புரி நூல், உடல் முழுவதும் திருநீறு, செவிகளில் தோடு, இடையில் புலித்தோல் ஆடை, தோளில் திருநீற்று பை, கழுத்தில் மணி மாலைகள், ஒரு கையில் மழு, மறு கையில் பொன் பூணிட்ட பிரம்பு என்ன தோற்றமளித்ததாக குறிப்பிடுகின்றனர்.

சித்தர்கள் என்னும் பெயரில் பலர் புறத்தோற்றத்தையே பெரிதும் மேற்கொண்டு நெஞ்சில் வஞ்சனையோடு போலிகள் பலர் வாழ்ந்தனர். அவர்களையும் சித்தர்கள் விட்டு வைக்கவில்லை மக்களுக்கு அடையாளம் காட்டியே சென்றனர்.
“தானென்ற வுலகத்தில் சிற்சில் லோர்கள்
சடைபுலித்தோல் காசாயம் தாவடம் பூண்
டூனென்ற வுடம்பெல்லாம் சாம்பல் பூசி
உலகத்தில் யோகியென் பார் ஞானியென்பார்
தேனென்ற சிவபூசை தீட்சை யென்பார்
திருமாலைக் கண்ணாலே கண்டோ மென்பார்
கானென்ற காட்டுக்கு ளலைவர் கோடி
காரணத்தை அறியாமல் கதறுவாரே

- என்று கருவூராரும்,
“சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு
சடைமுடியுங் காசயந் தன்னைச் சுற்றி
இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்
எண்ணமெல்லாம் பெண்ணாசைப் பூசைதானே”

- என வால்மீகரும்,

"சித்த ரென்றுஞ் சிரியர் ரென்றும்
அறியா ணாத சீவர்கள்
சித்த ரிங்கி ருந்தபோது
பித்த ரென்றே எண்ணுவீர்
சித்த ரிங்கி ருந்துமென்ன
பித்த னாட்டி ருப்பரே
அத்த னாடு மிந்தநாடு
மவர்க ளுக்கே லாமொன்றே"

- என்னச் சிவவாக்கியரும் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக சித்தர்கள் உணவு, உடை, உறையுள் என்பன பற்றிக் கவலைப் படாதவர்கள். இவர்கள் பற்றற்றவர்கள். யார் பேச்சையும் செவிமடுக்காதவர்கள், யாருடனும் பேசாதவர்கள். ஞானம், இரசவாதம், சமாதி நிலை கைகூடியவர்களிடம் உறவு கொண்டு இருப்பவர்கள்.

சித்தர்களின் செயல்களில் முதன்மையானது சமாதியில் இருத்தல் ஆகும். உண்ணாமல், உறங்காமல், இடம் பெயராமல், வெய்யில், மழை, பகல் இரவு பாராமல் இருப்பதே சமாதிநிலை. அவ்வாறு சமாதியில் இருந்து தாம் பெற்ற ஞானத்தை, பட்டறிவை மக்களுக்கு எடுத்துரைப்பவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர், முத்தர், ஞானியர் யார்..??

Author: தோழி / Labels: , ,

சித்தர், முத்தர், ஞானியர் யார் என்பதைதெளிவாக விளக்குகிறார் கோரக்கர்,

"பேராம் பிரமானந்த மடைந்தோன் சித்தன்;
பிரம மூப்பைக் கண்டவனே தவசிரேஷ்டன்;
கூரான வாசி மறித்தவனே சித்தன்;
குறிகண்டு மாயை வென்றவனே முத்தன்;
பூராயம் தெரிந்தவனே கிரியை பெற்றோன்;
பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்;
நேரான தீட்சை பெற்றோன் சிவா முத்தன்;
நிறை சிவயோகம் புரிந்தோன் ஞானியாமே."
- கோரக்கர் பிரமஞான தரிசனம் -


இப்பாடலின் மூலம் சித்தர், முத்தர், ஞானியர் பற்றிய தெளிவான விளக்கம் அறிய முடிகிறது

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...