"கண்டிலேன் கற்பூர வில்வந்தானும்
கடிந்தரைத்துப் பாக்களவு பாலிலுண்ணு
அண்டில்லா அக்கினியை தானவிக்கும்
அழுந்துகின்ற மேகமெல்லாம் சாடிப்போகும்
மண்டிலேன் வாதபித் தத்தை நீக்கும்
வாய்நீர்தான் மிகூறல் வற்றிப்போகும்
வெண்டில்லா மேனி சரசரப்புப்போகும்
மிக்கன வெள்ளெழுத்து மீறிடாதே"
- போகர் -
கற்பூர வில்வம் எனும் மூலிகையை எடுத்து நன்றாக அரைத்து பாக்களவு எடுத்து பாலுடன் சேர்த்து ஒருமண்டலம் மாலை வேளையில் உண்டால்.உடம்பிலுள்ள சூடு இல்லாது போவதுடன், வாதம் , பித்தங்களையும் போக்கி உமிழ் நீர் அதிகம் சுரப்பதும் நின்றுவிடும் அத்துடன் உடம்பிலுள்ள நோய்க்காரணிகள் அனைத்தும் இல்லாது போகும், ஆனால் பத்தியம் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று போகர் சொல்கிறார்.
Post a Comment



11 comments:
இந்த முறையும் நன்றாக உள்ளது.
@chandru2110
மிக்க நன்றி...
என் மாதிரி முழுச் சோம்பேறி பசங்களுக்கு பத்தியமில்லாத ஒரு கற்ப முறை இருந்தா சொல்லுங்க....புண்ணியமாப் போகும் உங்களுக்கு!
@டவுசர் பாண்டி...
இதே கேள்விய 67 பேரு என்கிட்டே மெயில்ல கேட்டாங்க நானும் எல்லா புத்தகத்திலும் தேடிப்பார்த்தேன்.... ஒரு முறை இருக்கு அதையும் சொல்வேன். நன்றி...
என் மாதிரி முழுச் சோம்பேறி பசங்களுக்கு பத்தியமில்லாத ஒரு கற்ப முறை இருந்தா சொல்லுங்க....புண்ணியமாப் போகும் உங்களுக்கு!
டவுசர் பாண்டியின் இக்கேள்வியை நான் கடுமையாக ஆதரிக்கிறேன்.
நன்றி.
@rajsteadfast
நன்றி...
தோழி! எல்லாமே நல்ல வழிமுறைகள்.!
இவைகள் செய்வதற்கும் எளிதானவை!
நன்றி!
@அண்ணாமலை..!!
மிக்க நன்றி...
idharku enna pathiyam adhai thelivaha koora mudiyuma
@udhaya kumar
http://siththarkal.blogspot.com/2010/03/blog-post_30.html இந்த லிங்ல சொல்ல பட்ட பத்தியமே இதற்க்கும் நன்றி..
கற்பூர வில்வம் என்பது கற்பூர வள்ளியா ?
Post a Comment