காயகற்ப முறை - 02.

Author: தோழி / Labels: , , ,

"திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக்கொணர்ந்து
மண்டலந்தான் பாக்களவு பாலில் அரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரந்தான் போகும்
கரைந்திட்ட தேகமது கறுத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரங்காணும்
இறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகியேறும்
ஏற்றமாஞ் சுழிமுனையும் திறந்துபோமே"


- போகர் -

விஷ்ணு கிராந்தி என்னும் செடியை எடுத்து (வேர்ப் பகுதியைத் தவிர்த்து) பால் விட்டு அதை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் பாக்களவு எடுத்து தினமும் மாலை வேளைகளில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட வேண்டும்.

இப்படிச் சாப்பிட்டு வந்தால் மறந்து போன நினைவுகள் எல்லாம் திரும்பவருவதுடன் ஞாபகசக்தி அதிகரிக்கும், கண்பார்வையானது ஒரு யோசனை தூரம் வரை பார்க்கும் சக்தியைப் பெறும், உடம்பு கறுத்து ஒளிபெற்று மின்னும், சுவாசம் சிறப்பாக செயற் படுவதுடன், சுழிமுனை நாடியும் சிறப்பாக தொழிற்படத் தொடங்குமாம் என்கிறார் போகர்.

முக்கிய குறிப்பு :-

இதை சாப்பிடும் போது பத்தியம்(உணவு கட்டுப்பாடு) மிக அவசியம். எவற்றையெல்லாம் உணவில் தவிர்க்க வேண்டுமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

rajsteadfast said...

நன்றி. நல்ல தகவல்.

ttpian said...

imputtu visayamaa?
naanum siddha marunthil pizaippu nataththkira aasaamithaan!
k.pathi
pathiplans@sify.com

தோழி said...

@rajsteadfast
மிக்க நன்றி...

தோழி said...

@ttpian
மிக்க நன்றி...

chandru2110 said...

இந்த முறையின் பலன்கள் எனக்கு தேவைபடுவதால் முயற்சிக்கலாம் என்று நினைக்குறேன். ஒரு சந்தேகம் " தினமும் விஷ்ணு கிராந்தி செடியை புதிதாக பிடுங்கி பயன்படுத்த வேண்டுமா? அல்லது கடைகளில் தூளாக விற்றால் வாங்கி சாப்பிடலாமா? ".

தோழி said...

@chandru2110
கடையில் கிடைப்பதில் நம்பிக்கை இருந்தால் தப்பில்லை. நன்றி

Mahesh Kumar said...

விஷ்ணு கிராந்தி செடியை எந்த பாலில் அரைக்க வேண்டும்? பசும் பாலிலா அல்லது எருமை பாலிலா அல்லது தேங்காய் பாலிலா?

Unknown said...

Nandri for your thagaval. Sir, Sennaiyuruvi Endral Yenna? athu yengu kidaikum.

GAMEDIA said...

Miga arumayaana thagal! Mikka Nanri!! anngalukku ithu porunthuma! kayakalpa muraiyai aangal parukalaama!

Unknown said...

Pls let Me know the diet

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
SaiPartha said...

nice article now only i came to know that

Post a comment