காயகற்ப முறை - 01.

Author: தோழி / Labels: , , ,
"வயிரமாம் நெல்லிமுள்ளி தனைவாங்கி
மருவ நன்றா யிடித்துமே யெடுத்து
ஆயிரமாம் அப்பிரேகச் செந்தூரந்தான்
அதற்க்கெட்டுப் பங்கு ஒன்றுசேர்த்து
துயிரமாந் தேன்தன்னில் குழைத்துண்ணு
சுகமாக மண்டலந்தான் உண்டாயானால்
கைரமாங் காயமது கருங்காலிக்கட்டை
கனல்போலே சோதியாய்க் காணும்காணே"


- போகர் -

நெல்லி வற்றலைத்தான் “நெல்லி முள்ளி” என்பர். இதே போல செந்தூரமும் தேவைப்படும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெல்லி வற்றலை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும். இப்போது எட்டு பங்கு நெல்லி வற்றல் பொடியுடன்,ஒரு பங்கு செந்தூரத்தை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மாலை வேளையில் அரை ஆழாக்கு அளவு எடுத்து சுத்தமான தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

இம்மாதிரி தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பானது கருங்காலிக் கட்டை போல இறுகி நெருப்புபோல் செம்மையாக மின்னும் என்கிறார் போகர்.

முக்கிய குறிப்பு :-

இதை சாப்பிடும் போது பத்தியம்(உணவு கட்டுப்பாடு) மிக அவசியம். எவற்றையெல்லாம் உணவில் தவிர்க்க வேண்டுமென முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

26 comments:

மாயாவி said...

Have you seen my comment for your last blog. Do u hv any idea about the symptoms wat i got and getting?

தோழி said...

@மாயாவி

என்னுடைய அனுபவம் என்று இதில் ஒன்றும் இல்லை, ஆனால் கடுக்காய் சாப்பிடுவதற்கு ஒரு கால அளவை வயதைக் கொண்டு சித்தர்கள் சொல்லி இருக்காங்க அதின் படி நீங்க முயற்சி செய்தால் சரியாகவே வரும்...

நீங்கள் எப்படி இந்த காய கற்ப்பத்தை உண்கிறீர்கள், எத்தனை நாட்களுக்கு உண்பீர்கள்..

மாயாவி said...

My age is 26. The info i hv is for my age i should take it for 30 days. fine let me wait for the completion of 30 days.

தோழி said...

@மாயாவி

சரிங்க... மிக்க நன்றி...

rajsteadfast said...

நல்ல தகவல். ஆழாக்கு அளவு என்றால் என்ன?

நன்றி

அகல்விளக்கு said...

இது பயனுள்ள பதிவு...

பகிர்வுக்கு நன்றி...

அரை ஆழாக்கு எவ்வளவு மதிப்பு...??

டவுசர் பாண்டி... said...

இதைத்தான் எதிர்பார்த்தேன்...என் மாதிரியான சிறுவர்களுக்கும் புரியும் வகையில் எளிய விளக்கங்கள்....

டவுசர் பாண்டி... said...

ஆழாக்கு என்பது முகத்தல் அளவையைச் சேர்ந்தது. ஒரு படி என்பது எட்டு ஆழாக்கு ஆகும். ஒரு படி சற்றேறக்குறைய ஒரு லிட்டர் வரும். இதை வைத்து ஆழாக்கினை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

டவுசர் பாண்டி... said...

நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் சரியாக சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

தோழி said...

@டவுசர் பாண்டி...

நீங்கள் சொல்வதும் சரி பாண்டி, ஆழாக்கு என்பதற்க்கு பலர் பலவிதமான விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், அரைக் கிலோ என்பது கிட்டத்தட்ட ரெண்டரை ஆழாக்கு என்றும் சொல்வர். ஆனால் தற்காலத்திலும் சித்த மருந்துக் கடைகளில் ஆழாக்கு அளவுமுறை கடைப் பிடிக்கப் படுகிறது. ஆகவே சித்தமருந்துக் கடையில் ஆழாக்கு அளவு சாதனங்கள் உள்ளன. அவர்களின் உதவியை நீங்கள் இதில் பெற்றுக்க் கொள்வதே சிறந்தது. நன்றி..

தோழி said...

@rajsteadfast

மிக்க நன்றி...

தோழி said...

@அகல்விளக்கு

மிக்க நன்றி...

Sri Kamalakkanni Amman Temple said...

நெல்லி வற்றலைத்தான் “நெல்லி முள்ளி” என்பர். இதே போல செந்தூரமும் தேவைப்படும். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.:)))


பயன்படும் பதிவுகளுக்கு மூலிகை எங்கே கிடைக்கிறது என்று தாங்கள்
கூறியிருப்பது சிறப்பு.
பலருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.

தோழி said...

@Sri Kamalakkanni Amman Temple

மிக்க நன்றி...

செல்வமுரளி said...

காயகற்பறம் கிட்டத்தட்ட 300 முறைகள் இருக்கிறதாமே,
வேப்பம்பூ, புன்னைமரப்பூ , ஜோதிப்புல் உட்பட பலவற்றை பயன்படுத்தி காயகல்ப முறைகள் இருக்கிறது. அப்படித்தானே தோழி!

தோழி said...

@செல்வமுரளி

ஆமாம் உண்மை தான் 300 க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன, நன்றி.

jagadeesh said...

thozhi
we shouldnt use Salt during medicine days ah? salt is in pathiyam ah?

தோழி said...

சித்த மருத்துவத்தில் பத்தியம் மிகவும் முக்கியமானது. மருந்து எடுத்துக் கொள்ளும் போது உணவில் உப்பு தவிர்க்கப் படுதல் அவசியம்.தீவிரமாக கடை பிடித்தால் மட்டுமே சுகம் காண முடியும். நன்றி.

jagadeesh said...

@தோழி
1 ஆழாக்கு - 168 மி.லி.

srini said...

Dear Sister

All messages are fantastic, Its useful for every one, great achievement.....(you are living sidha)

I have one doubt please clarify its very important for us, Kayakarpam-01, here you wrote only chenduram but lot of chenduram is there, please tell me correct chenduram name (eg., lingam chendrum, aya chendrum and etc.,)

Reply please... please.. please..........

Thanks
Srini

srini said...

@Sri Kamalakkanni Amman Temple

srini said...

Please list out the chenduram name because lot of chenduram is there.....................

Its very helpful for every one.........

srini said...

Dear Sister

Please list out the chenduram name please because lot of chenduram is there........

Its very very helpful for everyone..............


Thanks
Srini

தோழி said...

@srini

இங்கு குறிப்பிடப்படுவது அபிரேகச் செந்தூரம் ஆகும்.

நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ko Prince said...

பாடலில் ஆழாக்கு என்று கூறப்பட்டதாக தெரியவில்லையே தோழி.... ஆழாக்கு என்பது தங்களது அனுபவ அளவா???

Post a Comment