சித்தர்கள் பற்றி அனைவரும் அறியமுடியுமா...?

Author: தோழி / Labels: , ,

சித்தர்கள் இலக்கியங்கள் எளிதாக எங்கள் கைகளில் கிடைப்பதில்லையே? ஏன்? அதற்கும் விளக்கம் அளிக்கிறார் அகத்தியப்பெருமான்.

"கெதியறியாப் பாவிகட்கு இந்நூல் கிட்டாது
கிருபையுள்ள ஞானி களுக்கே எய்தும் எய்தும்
பதியறிய நன்மௌன யோகிகட்கே
பெரிசுத்த நூலிதுதான் பதனம் பண்ணும்
விதியிலை என்றெண்ணாதே; நூதலைத்தேடு;
விண்டு மிண்டு பேசாதே; வேண்டாம் வேண்டாம்;
நிதி பெறுவார் உபசாரம் நீக்கி போடு;
நினைவு கொண்டு சூத்திரத்தின்
நிலையை பாரே"


- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:7 -


“அருளினதோர் ஐநூறும் யாருக்கென்றால்
அகங்கடந்த மேஞ்ஞானியருள் பெற்றோர்க்குக்
குறு முகமாய் கொடுப்பதல்லால் மற்றோர் கையில்
கொடுத்தவர்க்கும் பெற்றவர்க்கும் சாபம் கூறிப்
பெருமையுள்ள சித்தர்தமை வணங்கிப் போற்றி
பிரமன் தன் உத்தரவு தன்னால் இந்நூல்
கருவறிய ஞானிகட்கே வெளியிட்டேனால்
கையடக்கமாக வைத்துக் கண்டுதேறே”


- அகத்தியர் பரிபாசைத்திரட்டு 1:23 –

அதாவது ஞானமார்க்கத்தில் நாட்டம் உள்ளவர்கள் குருமுகமாய் அறிந்து கொள்வதற்காகவே பெரியோர்கள் பாடி வைத்தனர் என்றும், எல்லோருக்கும் பொதுவாக தம்முடைய நூல்களை அவர்கள் இயற்றவில்லை என்றும் இந்தப் பாடல் மூலம் தெளிவு படுத்தியுள்ளார் அகத்தியர்.

சித்தர்களின் பாடல்களில் உவமை, உருவகம் போன்ற இலக்கிய நயம் இல்லாது இருப்பினும் தம் கருத்துக்களை மறைபொருளாக பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்திக் கூறிச் சென்றுள்ளனர். இவை ஓர் அரிய பொக்கிஷம். இதனை நாம் முழுமையாக உணர்ந்து பொருள் புரிந்து கொண்டோமாவெனில் இல்லை என்றே கூற வேண்டும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

அண்ணாமலையான் said...

மிக அருமையா சொன்னீங்க... நாம புரிந்து கொள்ளாத விஷயங்கள்... பல

chandru2110 said...

சித்தர்கள் எழுதியதில் அர்த்தம் புரியாமல் பல மருத்துவ குறிப்புக்கள் பயன்படுத்தமுடியவில்லை

RJ said...

Thozhiyidam oru kelvi! Intha siddhar padal, vilakkam muthaliyavi valayil irunthalum athanai padikka vantha engalukku ethavathu mun jenma niyathi allathu palan irunthathaal thaan undu endru artham kolalama?

அருணையடி said...

RJ,

Kandippa Appadithan!

Anonymous said...

சித்தர்களின் அரிய கருத்துக்கள் உங்களுக்கும், உங்கள் வலைப்பதிவின் மூலம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்!!! நன்றி.

FIRE said...

avargal sonnathu sariyea tholzhi.... evargal eyatriya padalgal yengu kedaikum??

Saravanan Arumugam said...

சித்தர்களின் அறிய குறிப்புகள் நூல்கள் தங்களுக்கு எவ்வாறு கிடைத்தது

Saravanan Arumugam said...

நீங்கள் தட்டச்சு செய்தது எழுத்து பிழைஇல்லாததா, ஒரேழுத்து பிழை இருபினும் இதனை முயற்சிபவர்கள் தவறான பொருளை அறிவார்கள்.

நான் புதியவன் ஏதேனும் பிழை இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி!!!

Sivakumar said...

Thanks. God Bless you

Sankaran Sampath said...

The great Lord resides in you and making you to do this great job. I bow to Him.
Let your work continue and i expect more and more poems and explanations.
May the gods bless you

Sankaran Sampath said...

The great Lord resides in you and making you to do this tremendous job.
I expect more and more poems and explanations in the future.
May the gods bless you.

idhayasankar shanmugam said...

Ne enaku magalaga pirukkavendum.
Enaku pulipani jothidam 300 book venum please anupunga

idhayasankar shanmugam said...

Hi

Post a Comment