சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்...!!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் கண்டறிந்த வாதவித்தையே சிறந்த விஞ்ஞான, ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.

இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும் , மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும்.

இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.

ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

ஆகவே,
சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றால் அது மிகைப் படுத்தல் அல்லவே.

அடுத்த பதிவில் சித்தர்கள் பற்றி ஏன் அனைவராலும் அறியமுடிவதில்லை என்பது பற்றி பார்போம்…

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

Jerry Eshananda said...

சரியாய் சொன்னீர்கள் ,இன்னும் சொல்லுங்கள்..

Unknown said...

:)

spiritual and siththargal said...

its correct

Inquiring Mind said...

சித்தர்கள் தான் விஞ்ஞானிகள் .. தயவு செய்து இன்றைய விஞ்ஞானத்தை அவர்களோடு ஒப்பிடாதீர்கள்.. இரண்டும், முற்றிலும் வேறுபட்டது..

the eastern science is entirely different from present day western science.. they exist in different dimensions..

Gobinath Loganathan said...

உண்மைதான் தோழி. சித்தர்களின் அறிவு எல்லையற்றது.

வேதை.அன்பரசு said...

aam thozhi.. thangal kootru nitharsanamana unmai....

R@je$h said...

Chitthargal Ulagin Muthal Mulumaiyaana Manitharkalum Thaivangalum Aavar

R@je$h said...

Chittargale Ulagin Mutha Mulu Manithanum Thaivangalum Aavar

Unknown said...

Arumai

Unknown said...

Arumai

Sakthi Videos said...

superb

Sakthi Videos said...

superb

Sakthi Videos said...

superb

Lib Power Tech said...

Supper unmailum unmai intrum ethanaiyo apurva molikaikal ullana anal nammal athai inanam kanamudiyavilla karam sarotana kurippukal illathe akkalathil.

kavithaiganesan said...

நல்ல செய்தி தமிழர்களுக்கு.தமிழ்ச்சித்தர்களை அறிந்து கொள்ள ஒரு நல்ல லாபம் பதிவு...கவிதைகணேசன்

Post a Comment