கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் பாடிய பாடல் இது.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.
மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான்.
ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான்.
தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.
ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர் இந்தப்பாடலில்...!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
17 comments:
மிக மிக அருமையாக “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல் விளக்கப்பட்டுள்ளது...
அதிலும் நா + லாறு (4 + 6 = 10) மாதம் என்பதை அழகாக பிரித்து விளக்கியது நன்று...
இறைவன் கொடுத்த இந்த உடல் என்கிற தோண்டியை நாம் எங்கே சரியாக பராமரித்து உபயோகிக்கிறோம்!!??
சித்தர்களின் அனைத்து பாடல்களுமே வாழ்வியல் தத்துவங்களை மிக அழகாக விளக்குபவையாகவே இருக்கிறது...
வாழ்த்துக்கள் தோழி..........
ரொம்ப ஆச்சரியமா இருக்கு... உங்க பதிவுகள்..
"என் கடன் பணி செய்து கிடப்பதே" உண்மையாகவா தோழி
I recommend you to look up vediceye.blogspot.com and agnisiksha.org which provide information about siddhas among other things...
தோழி..!! கண்டேன்..!!
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது..!!
அருமையான விளக்கம்..!!
விளக்கங்கள் அருமை! வீணாக்கி விட்டோம் காலத்தை
ஆழமான கருத்துடைய சிந்தனை...
இந்த பாடலை என்னுடைய தாத்தா அவ்வப்போது பாடி எனக்கு பொருள் சொல்லுவார். ஆனால் இப்போதுதான் தெரிகிறது அதனை கவனிக்காமல் விட்ட விளைவு..
நன்றிங்க
செல்வ.முரளி
அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
சித்தர்களின் சங்கேதப் பாடலுக்கு சிறப்பான விளக்கம்.
:)
தோழி....its
நாலாறு = நாலு + ஆறு
great sithargal
nanum ev variyai nookinean
thelivu prakkavillai thetinan
kantean vilakkathai
velvean. raja
Arumayana vilakkam
Arumayana vilakkam.
excellent explanation, thank you
Post a Comment