அஷ்டமாசித்துக்கள்...

Author: தோழி / Labels: ,


அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

R.Gopi said...

இந்த மகா புருஷர்கள் எல்லாம் இப்போது இமயமலை, திருவண்ணாமலை போன்ற போற்றத்தக்க தலங்களில் குடிகொண்டு இந்த பூவுலகை காக்கிறார்கள் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது...

வாழ்த்துக்கள் தோழி.....

ஈ ரா said...

பகிர்வுக்கு நன்றி..

வாழ்த்துக்கள்...

Kandumany Veluppillai Rudra said...

கேள்விப்பட்டதை ,இன்றுதான் அறிந்து கொண்டேன்
தொடருங்கள்,நன்றி

aanmiga udhayam said...

ப்ரிய தோழியே, வணக்கம் சித்தர்களை பற்றியும் ஆன்மீகத்தை பற்றியும் கடந்த சில மாதங்களாக அதிக ஆர்வமுடன் தேடி அவற்றை பற்றி அறிய பல வலைகளை தேடி கடைசியாக நேற்று ஏன் வாழ்வின் பாக்யமாக உங்கள் வலைபூ கிடைத்தது. மிகவும் அருமையாகும் பயனுள்ளதாகவும் இருகிறது. ஆன்மீகம், பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை போதித்த நம் நாடு தற்போது மேல்நாட்டு கலாச்சார சிரழிவினால் பாதிக்கப்பட்டு மக்கள் தவறான பாதையிலும், வேறு பயனற்ற மார்க்கத்தை நாடியும் செல்கின்றனர் இதை தடுத்து நல்வழி காட்ட உங்கள் வலை பயனுள்ளதாக இருக்கும். என் வாழ்த்துக்கள் நானும் தற்போது இதை பற்றி என் நண்பர்களிடமும் நெருங்கி பழகிய இடங்களிலும் என்னால் முடிந்த வரை சொல்லி வருகிறேன். உங்கள் நட்பு நாடி வருகிறேன். நானாகவே சில நாட்களாக ஒரு bolgspot துவங்கி சில கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணினேன் ஒரு வாரத்திற்கு முன் ஆன்மீக உதயம் என்று துவங்க முடிவுசெய்து அதற்காக என்னை தயார்செய்து கொண்டிருந்தேன் தங்கள் வலை கண்டதும் உங்கள் வலை நான் நினைத்த வேலையை மிகவும் நான்றாக செய்துவருகிறது, அதனால் என் நண்பர்களிடம் உங்கள்வலையை சிபாரிசு செய்கிறேன்.
தங்களின் தெய்வீக நாட்பை நாடும்,
உதயகுமார்.ச, கத்தார்

Kumar P said...

thanks friend... I already read about those things. But examples really new to me... thanks for nice examples...

Unknown said...

தோழி
நீங்கள் குறிப்பிட்ட எட்டும் கர்ம சித்தியாகும். இவை தவிர யோக சித்தியும், ஞான சித்தியும் பல உளதாக வள்ளலார் உரைநடைப்பகுதியில் குறிப்பிடுகிறார்.
இதில் பிரகாமியம் என்பதை பரகாயப் பிரவேசம், கூடு விட்டு கூடு பாய்தல் என்றும் கூறுவர். திருமூலர் இடையனின் உடலில் புகுந்ததும் பிரகாமியம் என்ற சித்தியே.

jaga said...

very nice friend

vel said...

sister iam murugavel..siddhar gal enbathu unmai anal neegal kooriyathu pola indhu kadaulgalai udaranamaga korathirgal.kadaul enbavan oruvane,avanuku edu enai yarum kidaiyathu....yenaku oru santhegam sivanudaya pillaigal MURUGAN,PILLAYAR...sari.muruganudaya pilaigal yar yar???adu um muruganuku 2manaivigal yen innum pillai pirakavillai????ellame kattu kathaigal..kattu kathaigal than pathiyel mudithu pogum...eraivanuku MUDALUM,MUDIUM.kidaiyathu..PRICE THE LORD GOD BLEAS YOU...

suresh said...

iyya thanks for give this information aanal
nekal vadamozhi sorkalai athigamaka payanpaduththamal erunthal migayum nandragaerukkum

Unknown said...

அஷ்டமா சித்துகள் என்ற பெயரில் நம் சித்தர்கள் செய்த அற்புதங்கள் அனைத்தும் mass-energy conversions(சக்தி-நிறை மாற்றங்கள்) என்பனவே. இருபத்தியோராம் நூற்றாண்டில் Einstein வகுத்த E=mc^2 எனும் கணித சமன்பாடு ஒரு சேமிக்கப்பட நிறையை சக்தியாக மாற்ற முடியும் என்று விஞ்ஞான பூர்வமாக கூறுகிறது. நம் சித்தர்கள் இதை தங்கள் உடலை வைத்து செயல்படுத்தினர். இவர்கள் இதற்கு எந்த ஒரு mass-energy equivalence relation அல்லது integration போட்டு இதை விளக்கவில்லை. ஆனால் ஒரு ஒப்புயர்வில்லாத இறை சக்தியின் துணைகொண்டு நிகழ்த்தினர். மெய்ஞானமே ஒரு விதமான புரிதலுக்கு அப்பாற்பட்ட விஞ்ஞானம் தான். அனால் இவர்கள் மறை பொருளில் பல தெய்வீக உண்மைகளை தங்கள் பாடலில் விளக்கி விட்டு சென்றதுக்கு பதிலாக ஒரு சில இயற்பியல் சமன்பாடுகளை பட்டவர்த்தனமாக (உதாரணமாக f=ma) கூறிவிட்டு போய் இருந்தால் மனித குலம் என்றோ அறிவியலில் முன்னேறி இருக்குமே? ஏன் இவர்கள் அதை செய்யவில்லை?

Nesan said...

I am guessing human thoughts much faster than light. Einstein's theory of relativity may fail when using that formula.
It turns out that roughly 70% of the Universe is dark energy. Dark matter makes up about 25%. The rest - everything on Earth, everything ever observed with all of our instruments, all normal matter - adds up to less than 5% of the Universe. Come to think of it, maybe it shouldn't be called "normal" matter at all, since it is such a small fraction of the Universe.

Unknown said...

Excellent write up.

Post a comment