குருவுக்கு சீடர் உணர்த்திய உண்மை...

Author: தோழி / Labels:

மச்சேந்திரர் என்ற சித்தருக்கு, ‘கோரக்கர்’ சீடனாக இருந்தார். இவர்கள் இருவரும் ஒருநாள் காட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது தன் சீடனிடம் மச்சேந்திரர், “இந்தக் காட்டில் திருடர் தொல்லை உண்டா?” என்று கேட்டார்.

அதற்கு கோரக்கர் எந்த பதிலும் சொல்லாமல் தன் குருநாதர் ஏன் அப்படிக் கேட்டார் என்று சிந்தித்துக்கொண்டே வந்தார். இருவரும் ஒரு குளக்கரையை அடைந்தனர். மச்சேந்திரர் தன் சீடர் கோரக்கரிடம், தான் கொண்டு வந்த துணி மூட்டையைக் கொடுத்து விட்டு, காலைக்கடனைக் கழிப்பதற்காகச் சென்றார்.

அப்பொழுது அந்தத் துணி மூடையைச் சோதித்துப் பார்த்த கோரக்கர் அதில் தங்கக் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டார்! “இதனாலன்றோ நம் குருநாதருக்கு பயம் உண்டாயிற்று?” என்று நினைத்து அந்தத் தங்கக் கட்டியை குளத்தில் வீசி எறிந்தார். பிறகு இருவரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் குருநாதர் மச்சேந்திரர், “இங்கே கள்ளர் பயம் உண்டா என்று கேட்டேன், நீ ஒன்றும் பதில் சொல்லவில்லையே?” என்றார். அதற்கு கோரக்கர் சொன்னார். “கள்ளர் பயம் குளக்கரையிலேயே நீங்கி விட்டது!”

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

R.Gopi said...

//“இங்கே கள்ளர் பயம் உண்டா என்று கேட்டேன், நீ ஒன்றும் பதில் சொல்லவில்லையே?” என்றார். அதற்கு கோரக்கர் சொன்னார். “கள்ளர் பயம் குளக்கரையிலேயே நீங்கி விட்டது!” //

பிரமாதம்....

இன்னும் நிறைய விஷயங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் தோழி....

தோழி said...

மிக்க நன்றி தோழா... என்னக்கு தெரிந்த அனைத்தும் பதிவேன்

சாமக்கோடங்கி said...

அருமையான கதை.. மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்..


நன்றி..
சாமக்கோடங்கி..

guru said...

how to identified my guru
where is my guru
please give same guru contact number

thiru narayanan said...

astonishing sitthars

thiru narayanan said...

astonishing sitthars

Unknown said...

arumaiyana padivugal

Post a comment