
லாஹிரி மகாசயரின் சீடர்களால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையைக் குறிக்கும் பட்டங்கள்; மகாமுனி பாபாஜி மகராஜ் (உயர்ந்த பேரானந்தப் பெருமான்), மகாயோகி (உயர்ந்த யோகி) மற்றும் த்ரயம்பக் பாபா அல்லது சிவ பாபா (சிவ அவதாரங் களின் பட்டங்கள்) முதலியன.
“பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித் தாலும் அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசையை ஈர்க்கிறான்,” என்று லாஹிரி மகாசயர் கூறியுள்ளார்.
“பாபாஜி தான் விரும்பும் பொழுது மட்டுமே மற்றவர்கள் அவரைக் காண்பதோ அல்லது அடை யாளம் கண்டுகொள்வதோ சாத்தியம்.
“பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத மான சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன்.
“ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள் சுட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.
“ஐயா, எவ்வளவு கொடூரம்!” அங்கிருந்த லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.
“அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன் கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை நீ பார்க்க வேண்டும்?”
இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப் படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின் தோளின் மேல் வைத்தார். “வேதனை நிறைந்த மரணத் திலிருந்து உன்னை நான் இன்றிரவு விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின் மூலமாக கர்மவினையின் விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது" என்றார்.
இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே ஏறுவதற்குரிய ஒரு பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்க திறனுடன் அவன் ஏறி வந்துவிட்டான்.
“ஐயா, தாங்கள்தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும்” அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. “செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக் கணக்கில் இடை விடாமல் தங்களைத் தேடிக் கொண்டி ருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.”
மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டு தலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து பயனில்லை.’
“அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது,” பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.
அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத் தான பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான். அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி கட்டளையிட்டார்.
அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன் குருதேவர் தன் கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார். அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ் சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
“நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்” உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்’என்றார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
19 comments:
பாபாஜியை பற்றி எவ்வளவு படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது....
அழகாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி தோழி...
“பாபா” படத்தில் பாபாஜி அவர்கள் காட்சியாக விரிவதை தரிசித்தது ஒரு பேரானந்த அனுபவம்...
நேரமிருப்பின் என் வலைகள் பக்கமும் வாருங்கள்...
www.jokkiri.blogspot.com
www.edakumadaku.blogspot.com
:)
கதை விடுவதற்கு ஒரு அளவில்லையா? சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்று அறிவூட்டிய சித்தர்களில், பாபாஜி போன்ற கட்டுக்கதை மாந்தர்கள் சேர்த்தியா?
Nice comment -:)
நான் ராஜ்குமார்
நான் பாபாஜியை வணங்குகிறேன்...தோழி
போலிச்சித்தர்கள் யார் என்பதை அடையாளம் காண சித்தர்கள் சில வழிகளைச் சொல்லியுள்ளனர்..
பகிர்வுக்கு நன்றி..
சாமக்கோடங்கி..
vannakam dharshi(Tholi)
babaji pattri ullaga makkalluku therivithatharku nanri...
by
prakash(Tholan)
பாபாஜி அவர்களை பற்றி அரிய சேதிகளை பகிர்ந்து கொன்டதர்க்கு மிக்க நன்றி உங்களது பணி சிறக்க வழ்த்துகிறேன்.
ந.ராஜசேகர்
பாபாஜி அவர்களின் அற்புதங்களை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழி. பாபாஜி அவர்கள் மஹா யோகி. அவரும் வள்ளலார் போலவே அன்புருவம்(ஒளியுருவம்) பெற்றவர். அவர்களை பற்றி பலருக்கு தெரியாதது மனதிற்கு வருத்தமளிக்கிறது. பாபாஜி பற்றியும், லாஹிரி மகாசயர் பற்றியும் மேலும் அறிந்து கொள்ள பரமஹம்ச யோகனந்தரின் "ஒரு யோகியின் சுயசரிதை" புத்தகத்தைப் படிக்கவும்.
I read - Babaji's image (foto) used in "Baba" film is a computer graphics drawing done by Rajni's daughter. Im not denying the concept, but as far as I know, the foto / drawing of Babaji is done by Rajni's daughter using computers.
now one morething youknow periyakulam vadakari movunagurusamikal ourindin nehru indiraandvadakari jamindar ourbavamagicman bavawriteonly onebookone boobin mandir otherbook inmyhand youwant thatbook plc callme 9003989923 iam old 74 10q
@ramasamisir u told some book can u givesome clear details i am new to this blog
@ramasamisir can u tell me about that book
@ramasamisir can u tell me about that book
@ramasamisir can u tell me about that book
பாபுஜியின் தோற்றம் அல்லது ஆதி மூலத்தை பற்றி அறிய இயலுமா..?
KANNAL KAANBATHUM POI KAADAL KETPTHUVM , THEERA VISARITHU UNARVATHE MAI.
SO EXPERAINCE THE GRACE OF MAHA AVATHAR BABAJI AND PLEASE COME TO COCLUTIONS.
NEVER EVER COMENT BAD ABOUT SIDDARAS PARTICULARLY BABAJI.
ONE THING IS CLEAR , SIDDARS NEED MOTHING FROM US.PLESAE UNDERSTAND.
HARI OM SAIRAM.
பாபாஜி பற்றி கூறியிருக்கிறீர்கள்... அது கட்டுக்கதை என்று கூறுகிறவர்களுக்கு நான் எனக்கு நடந்த உண்மைச்சம்பவத்தைக் கூறுகிறேன்...
எனது அப்பா யோகியாரிடம் தீட்சை பெற்று பாபாஜியை வழிபடுபவர்..
என்னை வெளிநாடு அனுப்புவதாக கூறி பணத்தை எல்லாம் வாங்கிவிட்டு அப்புத்தளை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டார்கள்.. மலையிலிருந்து தலைகீழாக விழுந்துகொண்டிருந்தபோது ஏதோவொருசக்தி மையங்கொண்டு என்னை மேலே வீசியெறிந்தது...
நான் பாபாஜியை நேருக்குநேராக என்னிருகண்களாலும் பார்த்தேன். என்னையே என்னால் நம்பமுடியவில்லை. நான் இறந்துவிட்டேனோ என்ற சந்தேகத்தில் கீழேகுனிந்து கால்கள் தரையிலிருப்பதை சோதித்துப்பார்த்தேன்.இந்துலகத்தில் என்னால் நிறைய மாற்றம்ஏற்படப்போவதாககூறியவர் முக்கியமான தருணத்தில் சித்தர்குலாத்தோடு காட்சிதருவதாகக்கூறி ஒளியாகமாறி மறைந்துவிட்டார்.....
நானொன்றும் சித்த சாதனைகள் செய்பவன் கிடையாது.. ஏதோஎன்னுடைய வழியிலே என்னிஷ்டப்படி நடப்பன்.. எனக்கு அவர் உயிர்கொடுத்ததை என்வாழ்வில் மறக்கமாட்டேன்....
@ViswanathVhi, can you tell me about that book?
Post a Comment