துறவால் நீர் கண்ட பயன் என்ன...?

Author: தோழி / Labels: ,


பெருஞ்செல்வந்தராக இருந்த பட்டினத்தார் திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி விட்டார்.

அதை கேள்விப்பட்ட அரசன் தன் சுற்றம் சூழ ஆரவாரமாக அவரை காண வந்தான். பட்டினத்தார் ஓரிடத்தில் வெறுங்கோவணத்துடன் ஆண்டிக்கோலத்தில் அமர்ந்திருந்தார்.

அரசன் அவரை வணங்கி, எமக்கு இணையாக செல்வம் படைந்திருந்த நீர், எல்லாவற்றையும் துறந்து விட்டீர். இதனால் நீர் கண்ட பயன் என்ன? என்று அலட்சியமாக கேட்டான்.

அவை எல்லாம் இருந்திருந்தால் நான் உம்முன் நின்றிருப்பேன். துறந்ததால் இப்போது என் முன் நீர் நிற்கிறீர்கள். இந்த சிறப்பு ஒன்று போதாதா.. !

என்று அமைதியாக பதிலளித்தார் பட்டினத்தார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

R.Gopi said...

தோழி

பட்டினத்தார் பற்றி மீண்டுமொரு முறை நினைக்க வைத்து விட்டீர்... எப்படி என்றால், நேற்று தான் பட்டினத்தார், அருணகிரிநாதர் என்ற இரு படங்களையும் (எத்தனையாவது முறை பார்த்தேன் என்று நினைவில்லை)... மறுபடியும் பார்த்தேன்..

இந்த பதிவை படித்ததும், நீங்கள் குறிப்பிட்டது மனதில் காட்சியாய் விரிந்தது...

நன்றி....

தோழி said...

மிக்க நன்றி தோழா

அண்ணாமலை..!! said...

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே..!!
அரசனுக்கு ஆயிரம் கவலை..!!
ஆண்டிக்கு எதுவும் இல்லை..!!
அருமை ..!! வாழ்க..!!

தோழி said...

மிக்க நன்றி தோழா

ராமகிருஷ்ணன் த said...

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசிவரை ஒருவருமே இல்லை
இதனை முதலில் தந்தவர் பட்டினத்தார்.

தோழி said...

மிக்க நன்றி தோழா ராமகிருஷ்ணன் த

Kandumany Veluppillai Rudra said...

அருமையான தத்துவங்கள் தொடரட்டும்.

தோழி said...

மிக்க நன்றி...

Anonymous said...

வாழ்த்துக்கள் ,
நீர் நிற்க , நான் இருக்க.

தோழி said...

@winmani

மிக்க நன்றி...

Unknown said...

சத்திய வார்த்தைகள் நிலைத்து நிற்க்கும்

Temples said...

Unmai Indha seidu endrum neliyanadu
Nandri Thozhi

Blogger_urs said...

patinathar pathi innum pamara makaluku...theriyathu...

theriyum pothu...

valikayean thathuvangal...sela velaya varum
thozli...

Post a comment