சித்தர்கள் என்றால் யார்...?

Author: தோழி / Labels: ,

கடவுளைக் காண முயல்பவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களை சித்தர்கள் என்றும் தேவாரம் வேறு படுத்திக் கூறும்.

ஆகமமாகிய இந்த மனித உடம்பிலே தெய்வபக்திகொண்டு அருட்ஷக்தியை வளர்த்து ஆன்ம பரிமாணத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருளை வழங்கி வருகின்ற பெரியோர்களே, மகான்கள் அவர்களே சித்தர்கள் என்று விளக்கம் கூறுகிறார் மீ. ப. சோமசுந்தரனார்.

மூச்சினை அடக்கி யோகா ஆற்றலினால் உடலில் உள்ள மூலாதாரத்தில் மனதை முறையாகக் நாட்டிக் குண்டலினியை எழுப்பி பற்பல அனுபவமும் வெற்றியும் கண்டு அப்பாலுள்ள எல்லாம் என பொருளில் நினைத்து சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவி உள்ளது என அறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிடுகிறார்.

இவர்கள் சொல்வது இருக்கட்டும். சித்தர்கள் பற்றிய குறிப்புகளை சித்தர்கள் எப்படி தருகிறார்கள்??

சித்தர்கள் என்ற கேள்விக்கு அவர்களே தரும் பதில் இதோ.....

"ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்" என்று கருவூரர் சொல்கிறார்.

"எழும்பாமல் வாசனையைக் கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை யடித்தொன் சித்தன்"
என்ற சட்டை முனியும்,

"சிந்தை தெளிந்து இருப்பவ ஆர், அவனே சித்தன்"
என்றும்,

"செகமெல்லாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்" என்றும் வான்மீகரும்,


" யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே
" என்றும்,

"சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே"
என்றும் திருமூலரும் சித்தர்களுக்கு விளக்கம் தருகிறார்.

இந்த சித்தர் என்ற திருக் கூட்டத்தினர் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பும் இருந்தமை அவரது திரு வாக்கினாலும் புலனாகிறது.

"மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன்"

என்று தொல்காப்பியர் புறத்திணையியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியார், "காமம், வெகுளி, மயக்கம்" இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்" என உரை எழுதிக் கலசயோனியாகிய அகத்தியர் முதலியோரும் அறிவர் என்றுணர்க" என விளக்கம் எழுதியுள்ளார். எனவே தொல்காப்பியர் கூறிய அறிவரைச் சித்தர் என விளக்கம் கூறுகிறார். இதனால் அவர்தம் காலத்து சித்தர்களை "அறிவர்"என அழைக்கப்பட்டது புலனாகும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

27 comments:

மதுரை சரவணன் said...

siththar enbavar arivar ena unarththi ariya vaiththamaikku nanri.

அண்ணாமலையான் said...

இவ்ளோ தெரிஞ்சு வச்சுருக்கீங்களே... நீங்க யாரு?

சொல்லச் சொல்ல said...

பொறுத்த மான மேற்கோள்களும் உங்களின் எளியமுறை விளக்கங்களும் அருமை .

ஹரீகா said...

இந்த உலகில் கடவுளை கண்டவர் யார்? ஊரை ஏமாற்றி பிழைக்க இப்படியும் சில வலிகள்...

R.Gopi said...

சித்தர்களை பற்றிய உங்களின் எழுத்துக்கள் மிகவும் அருமை...

மேலும் பல படைப்புகளை படைக்க வேண்டுகிறேன்..

Unknown said...

சத்,சித்,ஆனந்தம்,,,,சச்சிதானந்தம்,,,,சத்தை அறிந்தவன் சித்தன் அல்ல,,சத்தானவனே சித்தன்

அண்ணாமலை..!! said...

ஆகா.. அருமையான விளக்கங்கள்..!! வாழ்க தோழி..!!..!!!
"
பித்தம் கலங்கிஇப் பிறப்பை அறுத்தெறிந்(து)
உத்தம எண்ணமதா லுறவறுத் திறையெண்ணம்
நித்தம் தனதாக்கி நீலமேக வண்ணன்பால்
சித்தம் வைத்தானே சித்தன்..!!
"

Anonymous said...

அன்புள்ள தோழிக்கு உங்கள் இமெயில் முகவரி
தெரியப்படுத்தலாமா ?

karthic said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது

mohan said...

valka valamudan.

Unknown said...

hi aka, u r doing a grate service,
in batticaloa (situated in srilanka)
there is siththergal ashramam,and there is a master called punniya retnam.he teach about the connection between us and the god,he said "we all god".and he said "who create this univers ,he is inside us,if u want to know him you should clean ur mind,who get the control of his mind he can control the wotld.
he is living in mutheliyar street ,batticaloa town,if u want to know about more, go there

Unknown said...

hi aka, i know a sithther in india ,his address is rajkumar swami,akila ulaga maha siththergal sapai,parambaloor,bhrama reshi hill.its my gift for u

சாமக்கோடங்கி said...

இவ்வளவு அருமையான ப்ளாகை இவ்வளவு நாளா பாக்காம மிஸ் பண்ணிட்டேன்... சித்தர்கள் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆசை..

கண்டிப்பாக ஒவ்வொரு பதிவாக படித்து முடித்து விடுகிறேன்..

இந்த ப்ளாகை விட நல்ல தகவல்கள் எனக்கு ஒருசேரக் கிடைக்காது என்று நினைக்கிறேன்..

இப்படிக்கு
சாமக்கோடங்கி..

Sandal Krish said...

வழி தேடிய விழிகளுக்கு
வெளிச்சமாய்
உங்கள் பதிவு இன்று
கண்ணில் பட்டது
முகவரி தந்த நண்பனுக்கும்
அருள் செய்த
ஆண்டவனுக்கும்
கோடி கோடி நன்றிகள்

Sandal Krish said...

வழி தேடிய விழிகளுக்கு
வெளிச்சமாய்
உங்கள் பதிவு இன்று
கண்ணில் பட்டது
முகவரி தந்த நண்பனுக்கும்
அருள் செய்த
ஆண்டவனுக்கும்
கோடி கோடி நன்றிகள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சகோதரி! எனது நண்பன் சி பி செந்தில்குமார், உங்களை எமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்! இன்று முதல் உங்கள் ப்ளாக் படிக்கிறேன்! உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!

Unknown said...

சித்தர்கள் ராச்சியம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன் !

CM ரகு said...

I like this blog.
good writing, definitely will be useful to all.
Thank you.

CM Raghu

vv9994013539@gmail.com said...

i like this blog more informative
all the best
please write yourself.

cheena (சீனா) said...

அன்பின் தோழி - அருமையான வலைப்பூ - இன்று தான் அறியப்பெற்றேன். தொடர்ந்து படிக்க முயல்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Alok said...

அன்புள்ள தோழிக்கு,
சித்தர்கள் பற்றி அறிய மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். தயவு செய்து என்னை தெளிவு படுத்தவும். நம் பூமியில் சிவன், பார்வதி என்ற கடவுள்கள் இருப்பதாக (அதாவது ஒன்று அல்லாமல் பல சக்திகள்) இருப்பதாக நம்புகிறீர்களா? அது உண்மை என்றால் விஷ்ணு , ராமர், ஹனுமான்.... போன்ற சக்திகளும் உண்டா ?

Raju said...

Mr alok,
Ariyum sivanum onnu ariyathavan vayila mannu! Sarithana Tholi avarkaley.

saran said...

mime guy

ESWAR Computers said...

தோழி உங்கள் இணைய பக்கம் மிகவும் பிடித்திருக்கிறது ... எனக்கு ஒரு சிறு சந்தேகம்... சித்தர்களின் ஜீவ சமாதி சிலருக்கு இரண்டு இடங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள், அது சாத்தியமா...? தயவுசெய்து எனக்கு புரியுமாறு செல்லுங்கள்...

Unknown said...

Hai sister. Ellam supera iruku. Ippathan siddhargal mela oru nambika vanrhuruku. Na innum niraya visiyam therinjikanumnu asa paduren

Unknown said...

Hai sister. Ellam supera iruku. Ippathan siddhargal mela oru nambika vanrhuruku. Na innum niraya visiyam therinjikanumnu asa paduren

Unknown said...

Hai sister. Ellam supera iruku. Ippathan siddhargal mela oru nambika vanrhuruku. Na innum niraya visiyam therinjikanumnu asa paduren

Post a Comment